புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அதுக்கு சின்ன பையன் ஓகே? முகம் சுளிக்க கேட்ட ரசிகருக்கு ஸ்ருதி பதிலடி

நடிகைகள் தங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவதை சமீபகாலமாக வாடிக்கையாக வைத்துள்ளனர். அதற்கு இன்ஸ்டாகிராம் பக்கம் பெருமளவில் உதவி செய்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேரலையில் ரசிகர்களுடன் சுருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியபோது பல எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவே அறியப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் நடிகையாக இருந்தாலும் அவருக்கு சினிமாவில் உச்சத்தை தொட்டு கொடுத்த சினிமா உலகம் என்றால் அது தெலுங்கு தான். தெலுங்கில் உச்ச நடிகையாக மாறிய பின்னர் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தார்.

அதன் பிறகுதான் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்து வெகுவிரைவிலேயே அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார். இடையில் காதல் பிரேக் அப் விஷயத்தில் சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்தவருக்கு தமிழ் மார்க்கெட் காலியாகிவிட்டது. இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் அவரது மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு சான்றுதான் இப்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் சலார் படம்.

shruti haasan
shruti haasan

அதுமட்டுமில்லாமல் சுருதிஹாசன் கடந்த சில மாதங்களாக வேறு ஒரு நபருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் நேரலையில் வந்த ஸ்ருதிஹாசன் ஒருவரிடம் ரசிகர் ஒருவர் டீன் ஏஜ் பையனுடன் அந்த மாதிரி இருக்க ஆசையா? எனவும் இருப்பீர்களா? எனவும் கேள்வி கேட்டுள்ளார்.

இதை கவனித்த ஸ்ருதிஹாசன் அது முறையற்றது எனவும் அதே போல் உங்களது கேள்வியில் நியாயம் இல்லை எனவும் கூறி அந்த நபரை நோஸ் கட் செய்துவிட்டார். அவர் தற்போது தொடர்ந்து ஒரு காதல் தோற்றால் இன்னொரு காதல் என சென்று கொண்டிருப்பதால் அந்த ரசிகர் இப்படி கேட்டு உள்ளார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

Trending News