செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தோல்வியில் முடிந்த ஸ்ருதிஹாசனின் மூன்றாவது காதல்.. லோகேஷ் அப்படி என்ன சேட்டை செய்தாரோ ஆண்டவருக்கு தான் வெளிச்சம்

Shruthi Hassan : உலகநாயகன் கமலின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன் நடிப்பு மற்றும் பாடல் என அனைத்திலும் ஆர்வம் கொண்டவர். சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்த அவர் அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் கமல் எவ்வாறு காதல் சர்ச்சைகளில் சிக்கினார், அதே போல் தான் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் தொடர்ந்து காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார். 3 படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவருக்கும் மிக நெருக்கமான காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இதனால் இவர்களை இணைத்து வைத்து செய்தித்தாள்களில் கிசுகிசுக்கள் வெளியானது. அதன் பிறகு தெலுங்கு பக்கம் சென்ற ஸ்ருதிஹாசன் நடிகர் சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்ஸ்லி என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்ட பிரேக் அப்

சில காரணங்களால் இவரையும் ஸ்ருதிஹாசன் பிரிந்த நிலையில் டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்தார். மேலும் இவர்கள் கொண்டாடிய பர்த்டே பார்ட்டியே சர்ச்சையை உண்டாக்கி இருந்தது.

மேலும் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக சென்று வந்தனர். சமீபத்தில் லோகேஷ் உடன் நெருக்கமாக இனிமேல் பாடலில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இதற்கு பயில்வான் ரங்கநாதன் போன்ற சிலர் லோகேஷ் உடன் ஸ்ருதிஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என பேசினார்.

இதை அடுத்து ஸ்ருதிஹாசன், சாந்தனு இடையே பிரேக்கப் என்ற செய்தி வெளியாகி கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு இருவருமே தங்களது சமூக வலைதள பக்கத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக பதிவிட்ட புகைப்படங்களை நீக்கி இருக்கின்றனர்.

Trending News