Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி மற்றும் ஸ்ருதியின் ஒரு வருஷ கல்யாண நாளை கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற ஆரம்பித்து விட்டது. ஆனால் மண்டபத்திற்கு சுருதி வராமல் இருப்பதால் ரவி மொத்த டென்ஷனையும் மறைத்து வைக்கும் விதமாக அங்க வருபவர்களை சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் ஸ்ருதியின் அம்மா மற்றும் அப்பாவிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் ரவி தத்தளிக்கிறார். இருந்தாலும் மண்டபத்தில் இருப்பவர்களை டைவர்ட் பண்ண வேண்டும் என்பதற்காக விஜயாவை பரதநாட்டியம் ஆடச் சொல்லி வற்புறுத்துகிறார். உடனே விஜயா பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிற மாணவர்களை மேடையில் ஆட சொல்லுகிறார்.
அவர்களும் ஜாலியா ஆடிக் கொண்டிருக்கும் பொழுது ரவி பதட்டம் அடைகிறார். பிறகு அவர்கள் ஆடிய பிறகு விஜயா பரதநாட்டியம் ஆடுகிறார். அதுவும் முடிந்த நிலையில் எல்லோரும் ஸ்ருதி எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு ரவி, சுருதி கிளம்பி கொண்டிருக்கிறார் இப்ப வந்துருவார் என்று சொல்லி சமாளிக்கிறார்.
பிறகு சுருதியின் அப்பாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்ட ரவி அங்கே திருட்டு முழித்துக் கொண்டு மாமியார், விஜயா மற்றும் பார்வதி அத்தையையும் சேர்த்து ஆட சொல்கிறார். ஆனால் விஜயா முறைப்படி கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதால் ஈசியாக ஆடி வருகிறார். ஆனால் இந்த வயதில் இவ்வளவு தூரம் என்னால் ஆட முடியாது என்று பார்வதி மற்றும் சுருதி அம்மா நின்று விட்டார்கள்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விஜயா ஓவராக ஆடி விட்டார். எப்படியோ ஒரு வழியா இதெல்லாம் முடிந்த பிறகு ரவி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அண்ணாமலையிடம் நீங்கள் கல்யாணம் என்றால் என்ன, தம்பதிகளின் ஒற்றுமை எப்படி இருக்க வேண்டும் என்று பேசுங்கள் என அட்வைஸ் பண்ண சொல்கிறார். அதன்படி அண்ணாமலையும் இப்ப இருக்க கணவன் மனைவிகள் எந்த அளவுக்கு புரிதலுடன் இருக்க வேண்டும் என்று பேசி விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்து கடுப்பான ரவியின் மாமியார் மாமனார் என் பொண்ணு எங்கே என்று ரவியிடம் கேட்டு பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதனை அடுத்து ரவியை தேடி கண்டுபிடிக்க போனா முத்து மற்றும் மீனா ஒரு வழியாக சுருதி எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அந்த இடத்துக்கு போய் விடுகிறார்கள். பிறகு மீனா நீங்க இங்க வந்து என்ன பண்றீங்க உங்களை காணும் என்று ரவி எல்லா பக்கமும் தேடி டென்ஷனாக இருக்கிறார்.
இன்னைக்கு கல்யாண நாள் கொண்டாட வேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டு நீங்க பேசாமல் இங்கு இருந்தால் என்ன அர்த்தம் என்று மீனா கேட்கிறார். அதற்கு ஸ்ருதி, ரவி என்னை ஏமாற்றி விட்டான். இனி ரவியுடன் என்னால் வாழ முடியாது. அதற்காகத்தான் விவாகரத்து கேட்டு நான் இங்கே லாயரிடம் பேச வந்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
இதை கேட்டு அதிர்ந்து போன முத்து மற்றும் மீனா, ரவி மீது எந்த தவறும் இருக்காது. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் இப்பொழுது நடக்கப்போற பங்க்ஷனுக்கு கலந்து கொள்ள வேண்டும் என்று சுருதியை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போக முயற்சி எடுக்கிறார்கள். அந்த வகையில் எப்படியும் மீனா மற்றும் முத்து இருவரும் சேர்ந்து சுருதியை சமாதானப்படுத்தி மண்டபத்துக்கு கூட்டிட்டு போய் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ரவியை காப்பாற்றி விடுவார்கள்.