வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரவி செய்த காரியத்துக்கு வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ருதி.. மீனாவை திட்டிய மாமியார், சமாதானம் பண்ணிய முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஜெயிலுக்கு போன முத்துவை மீனா வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். ஆனால் வீட்டில் எந்த வேலையும் மீனா பார்க்காமல் காலையிலேயே வெளியே போனதால் கோபத்தில் விஜயா இருக்கிறார். அப்பொழுது கோலம் போட வந்த விஜயாவை பார்த்ததும் மீனா, அத்தை நான் பண்ணுகிறேன் என்று வேலைக்காரி மாதிரி கெஞ்சுகிறார்.

ஆனால் விஜயா, உனக்கு தான் நிறைய வேலை இருக்குமே இதெல்லாம் பண்ண எங்க நேரம் இருக்கிறது என்று திட்டுகிறார். அதற்கு மீனா, அவங்கள போய் காலையிலேயே கூப்பிடுவதற்கு போய் விட்டேன். அதனால் தான் நான் இந்த வேலையை பார்க்கவில்லை என்று சொல்கிறார். அதற்கு விஜயா, அவனை என்ன ஸ்கூல்ல போய் கூட்டிட்டு வர என்று நக்கல் அடித்துக் கேட்கிறார்.

உன் குடும்பத்திற்காக அவனை ஜெயிலுக்கு அனுப்பிட்ட, இப்ப வந்து ஒண்ணுமே நடக்காத போல பேசுறியா என்று மீனாவை திட்டுகிறார். அப்பொழுது ரோகினி, மனோஜ் வந்த நிலையில் ஒட்டு மொத்த பேரும் சேர்ந்து முத்து மீனாவை நக்கலாக பார்த்து பேசுகிறார்கள். உடனே அண்ணாமலை கோபமாக இருப்பதை பார்த்து முத்து மற்றும் மீனா மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துகிறார்கள்.

அதிலும் முத்து, அப்பா ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று உடனே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அவரும் நீ செய்தது ன தவறாக இருக்கலாம், ஆனால் உன்னுடைய நோக்கம் தவறில்லை என்று சொல்லி சமாதானம் ஆகிவிட்டார். அடுத்ததாக ரவி ஆபிசுக்கு கிளம்புகிறார். ஆனால் சுருதி உடம்பு சரி இல்லாமல் படுத்துக் கொண்டிருப்பதால் நீ ரெஸ்ட் எடு எனக்கு முக்கியமான வேலை இருக்கு.

நான் சீக்கிரம் முடித்துவிட்டு உன்னை வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறார். உடனே சுருதி என்னை விட உனக்கு என்ன அப்படி முக்கியமான வேலை இருக்கு. உன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை என்றாலும் லீவு போட்டு பார்க்க மாட்டியா என்று கோபப்படுகிறார். உடனே ரவி லீவுக்கு போன் பண்ணி பேசுகிறார். ஆனால் லீவு எதுவும் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் ரவி சுருதி இடம் நான் கண்டிப்பாக இன்னைக்கு போகணும் என்று சொல்லி போய் விடுகிறார்.

ஆனால் போகும்போது மீனாவிடம், சுருதியை கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்லி அக்கறையாக பேசி விட்டு போகிறார். இது எதுவும் புரியாத சுருதி, ரவி பண்ணின விஷயம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லி பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். இதை பார்த்து மீனா, சுருதியை போகாமல் தடுக்க பார்க்கிறார்.

ஆனால் சுருதி, ரவி பண்ணுவது ரொம்ப தவறு. நீங்களும் முத்துவும் பிடிக்காமல் கல்யாணம் பண்ணினாலும் உங்களுக்கு ஏதாவது ஒன்னு என்றால் எப்படி பார்த்துக்கொண்டார். ஆனால் ரவியும் நானும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என்னால் முடியாமல் உடம்பு சரியில்லாமல் இருக்கும் பொழுது என்னை கொஞ்சம் கூட கவனிக்காமல் வேலைதான் முக்கியம் என்று போய்விட்டார்.

இதனால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நான் என்னுடைய வீட்டுக்கு போகிறேன் என்று சொல்கிறார். உடனே விஜயா வந்து, சுருதி எங்கே போகிற என்று கேட்கும் பொழுது நான் எங்க வீட்டுக்கு போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு விஜயா, மீனாவை பார்த்து நீ ஏதாவது சொன்னியா என்று கேட்கிறார். உடனே மீனா நான் என்ன சொல்ல போகிறேன், இதுக்கும் என்கிட்ட வந்துராதீங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

ஆனாலும் விஜயா, ஸ்ருதியை போகவிடாமல் தடுத்து பார்க்கிறார். ஆனால் சுருதி யார் பேச்சையும் கேட்காமல் வீட்டை விட்டு போய்விடுகிறார். பிறகு என்ன விஷயம் என்பதை தெரிந்து கொள்ள விஜய்யா ரவிக்கு போன் பண்ணி கேட்கிறார். ரவி நடந்த விஷயத்தை சொல்லும் பொழுது விஜயா உன் மீது எந்த தவறும் இல்லை. நீ வேலைக்கு போக வேண்டியது உன்னுடைய பொறுப்பு. இதுக்கெல்லாம் கோவிச்சுட்டு போனா போகட்டும்.

கொஞ்சம் கூட புருஷன் மாமியார் என்ற மதிப்பு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்று ரவியிடம் கோபமாக பேசுகிறார். ஆனால் ஸ்ருதியின் கோபம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்பதற்கு ஏற்ப புரிந்து கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்துவிடுவார்.

Trending News