வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்பாவைப் போல நக்கலாக பதிலளித்த சிபிராஜ்.. வாயடைத்துப் போன தொகுப்பாளர்

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் சத்யராஜ். இவர் குறிப்பாக எல்லா மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். அதிலும் பாகுபலியில் இவரின் கட்டப்பா கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது உருவாகும் பான் இந்திய திரைப்படங்களில் சத்யராஜை முக்கிய கதாபாத்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் சத்யராஜ் வாரிசான சிபிராஜ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சிபிராஜ் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் வினோத் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரங்கா. இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஆனால் ஒரு சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே உள்ளது. ஆனால் தற்போது சிபிராஜ் மே 13ஆம் தேதி ரங்கா படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் ரங்கா படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி சமீபத்தில் வெளியிட்டார்.

மேலும் இப்படம் சிபிராஜ் திரைவாழ்க்கையில் திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரங்கா திரைப்படத்திற்காக சிபிராஜ் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஒரு சிறப்பு நேர்காணலின் போது ஹிந்தி தொடர்பான கேள்வி சிபிராஜ்யிடம் கேட்டுள்ளனர்.

ஹிந்தி தெரியாது போங்க என சிபிராஜ் கிண்டலாக பதிலளித்துள்ளார். தனது தந்தை போலவே சிபிராஜ் வெளிப்படையாக பேசியதை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியவில்லை என்றால் தான் அவமானமாக கருத வேண்டும், ஹிந்தி தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News