Sibiraj: விஜய் மற்றும் சத்யராஜ் காம்போவில் நண்பன் படத்தில் காமெடி பார்த்திருப்போம். ஆனால் சத்யராஜ் வீடு விஜயா சீரியஸ் மோடுக்கு போயிருக்கிறது.
சத்யராஜ் பெரும்பாலும் பெரியார் கருத்துக்களை பேசக்கூடியவர். இதனால் தான் என்னவோ அவருக்கும் திமுகவுக்கும் கொஞ்சம் ஒத்து போய்விடும்.
எந்த ஒரு இடத்திலும் பெரியார் கொள்கைகளை தைரியமாக பேச சத்யராஜ் தயங்கியதே இல்லை.
அவருடைய மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் தன்னுடைய நிலையான இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
இன்ஸ்ட்டா ஸ்டோரிய கவனிச்சீங்களா?
மகள் திவ்யா சத்தியராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதோடு மட்டுமில்லாமல் சமூகப் பிரச்சனைகள் குறித்தும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திவ்யா சத்யராஜ் திமுக கட்சியில் இணைந்தார். நேற்று விஜய் பரந்தூர் போனது தமிழ்நாட்டில் பெரிய அளவில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.
அது சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்றை சிபிராஜ் தன்னுடைய இன்ஸ்டால் ஸ்டோரியில் வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பயோவில் கூத்தாடி என குறிப்பிட்டு இருக்கிறார்.
எல்லோரும் நேற்று தான் அவர் பயோவை அப்படி வைத்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் சில மாதங்களுக்கு முன்பே தன்னுடைய பயோவை கூத்தாடி என மாற்றிவிட்டார்.
விஜய் புகைப்படத்தை பகிர்ந்ததன் மூலம் தன்னுடைய ஆதரவை தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
மகள் திமுக, மகன் தவெக இதனால் மொத்தமாக மிரண்டு போயிருப்பது என்னவோ சத்யராஜ் தான்.