புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எதிர்பார்ப்பை எகிற வைத்த மாயோன்.. வெளியான ரிலீஸ் தேதி அப்டேட்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரது நடிப்பில் டபுள் மீனிங் ஃப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாயோன். இந்த படத்தினை என் கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரான அருண்மொழி மாணிக்கம் படத்தை தயாரித்திருப்பது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

இசை ஞானி இளையராஜா இசையமைக்க ராம்பிரசாத் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் மிரட்டலாக இருப்பதாக டீசரை பார்த்தவர்கள் விமர்சனம் செய்தனர்.

மேலும் மாயோன் படக்குழு புது முயற்சியாக பார்வையற்றவர்களுக்காக பின்னணி குரலுடன் பிரத்தியேக டீஸர் ஒன்றையும் உருவாக்கியது. இந்த டீசரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மாயோன் படக்குழுவினருக்கு பெரும் பாராட்டும் கிடைத்தது. மேலும் படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்காக உயர்த்தியது.

இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 24ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த படத்தின் டிரைலர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வியூஸ் தாண்டி சாதனை படைத்து வருகிறது.

Trending News