செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சித்தார்த் இறந்துவிட்டதாக முடிவு செய்த யூடியூப்.. பெரும் அதிர்ச்சியில் கோலிவுட்!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட சித்தார்த் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அங்கு நடந்த சில அரசியல் காரணமாக எட்டு வருடங்களுக்குப் பின்னர் தற்போது தான் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் சித்தார்த் நடித்த ஆயுத எழுத்து, 18, காதலில் சொதப்புவது எப்படி?, உதயம் என்.எச். 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அடிக்கடி பாஜக அரசு குறித்து விமர்சனங்களையும், கருத்துக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். இதனால் பல எதிர்ப்புகளையும், பலரது மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் யூட்யூப் சேனல் ஒன்று இளம் வயதில் உயிரிழந்த நட்சத்திரங்களின் பட்டியலில் சித்தார்த்தின் புகைப்படத்துடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சித்தார்த், இந்த வீடியோ குறித்து யூடியூபிடம் புகாரளித்துள்ளார். ஆனால் வீடியோவில் எந்த பிரச்னையும் இல்லை என யூடியூப் நிறுவனம் அவருக்கு பதிலளித்துள்ளது.

இதற்கு நடிகர் சித்தார்த், “அட பாவி” என குறிப்பிட்டு அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரு சில யூடியூப் சேனல்கள் தங்களது வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற போலியான தம்ப்நெயில்களை வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

siddarth
siddarth

Trending News