திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இப்படி பண்ணா சாக்கடையில் தான் மலரும் – கடுப்பான சித்தார்த்

ஷங்கரின் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவிலும் நடித்தார். தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் “காதலில் சொதப்புவது எப்படி” படத்திலும் நடித்தவர் பின்பு ஜிகர்தண்டா, காவிய தலைவன் ,அரண்மனை 2, சிவப்பு மஞ்சள் பச்சை, அரவம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மிகவும் எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றவர். சித்தார்த் நடிப்பை தாண்டி சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர். நடிகர் சித்தார்த் பொய் சொன்னா  CM-மாய் இருந்தாலும் கன்னத்தில் அடிப்பேன் என்று நடிகர் சித்தார்த் அவர்கள் ஒரு பதிவை டுவிட்டரில் கூறியிருந்தார்.

அதற்கு ஒருவர் ட்விட்டரில் சித்தார்த் அவர்களுக்கு கேள்வியும் எழுப்பியிருந்தார் நீட் தேர்வு முதல் சட்டமன்ற கூட்டத்தில் ரத்து செய்வோம் என வாக்குறுதி செய்தார்கள். நேற்று நீட் எக்ஸாம் நடந்தது. பொய் சொன்னால் கன்னத்தில் அடிப்பேன் என்று கூறினீர்கள். இப்பொழுது என்ன பண்ணுவீர்கள் என சித்தார்த்தை அந்த நபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சித்தார்த் ரொம்ப டென்ஷனாக ஒரு ரிப்ளை கொடுத்திருக்கிறார். “கோபமும், சந்தேகமும் இருந்தாள் மூதேவி நீயே போய் கேளு இல்லனா உங்க அப்பன போய் கேளு நான் என்னோட வேலையை தாண்டா பார்த்துட்டு இருக்கேன்.

இதே வேலையா போச்சு ட்விட்டரை டாய்லெட் ஆக்கி வச்சிருக்கீங்க வேற எங்க மலரும் சாக்கடையில் தான் மலரும் எழவு இந்தியில சொல்லட்டா ரொம்ப கோவமா ரிப்ளை கொடுத்து இருக்கிறார்.

actor-siddarth-twit-reply
actor-siddarth-twit-reply

சித்தார்த் நிறைய பேர் பலதடவை கேலி செய்து இருந்தாலும், பொறுமையாக ரிப்ளை பண்ணுவார். ரொம்ப கோபமா இதற்கு பதில் அளித்துள்ளார். இது சித்தார்த் ரசிகர்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News