திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சமந்தாவை மறைமுகமாக தாக்குகிறாரா சித்தார்த்.? என்ன இப்படி சொல்லிடாரு.!

டோலிவுட் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து அறிவிப்புதான். நீண்ட நாட்களாக வெறும் செய்தியாக மட்டுமே பரவிவந்த நிலையில் தற்போது இருவருமே அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்வதை உறுதி செய்துள்ளனர்.

என்னதான் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும், கருத்து வேறுபாடு மற்றும் மனக்கசப்பு வந்தால் காதலர்களாகவே இருந்தாலும் இது தான் முடிவு என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். சினிமாவில் வெகுசில நட்சத்திர ஜோடிகள் மட்டுமே காதல் திருமணம் செய்து கொண்டு நீண்ட நாட்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சிலர் திருமணம் செய்த சில வருடங்களிலேயே பிரிந்து விடுகிறார்கள்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடியும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் நடிகரும், நடிகை சமந்தாவின் முன்னால் காதலருமான சித்தார்த் டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

siddarth-twit
siddarth-twit

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து பின்னர் பிரிந்து சென்றது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது சமந்தா அவரது விவாகரத்து முடிவை அறிவித்துள்ள நிலையில், சித்தார்த் இவ்வாறு ட்வீட் செய்துள்ளதால் சமந்தாவை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறாரோ என்ற கேள்வி எழுந்து வருகிறது.

Trending News