புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டேய் சாவடிச்சிடுவேன், ஓடிடு.. ரசிகரை மிரட்டிய சித்தார்த்.. ஏன்? எதுக்கு?

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக வரும் சித்தார்த் சமீப காலமாக படங்களில் நடித்து ஃபேமஸாகிறாரோ? இல்லையோ? சமூக வலைதளங்கள் மூலம் செம ஃபேமஸ் ஆகிவிட்டார். இவருடைய படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ இல்லையோ, இவர் ட்விட்டரில் என்ன சொல்லப் போகிறார்? என்பதற்காகவே பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சித்தார்த் எப்போதுமே அரசியல் ரீதியாக தைரியமான கருத்துக்களைச் சொல்வதற்கு தயங்கியதில்லை. இதனாலேயே அவருக்கு பல பஞ்சாயத்துகள். இதற்கிடையில் படங்களிலும் நடிக்க வேண்டிய சூழ்நிலை.

சித்தார்த் நடிப்பில் தமிழில் உருவாகி இன்னும் ரிலீசாகாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் திரைப்படம் டக்கர். இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்திய சினிமா பிரபலம் திலீப்குமார் என்று இறந்த துக்கத்தை சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

siddharth-tweet-01
siddharth-tweet-01

திலீப் குமாரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், பார்ப்பதற்கு அக்ஷய்குமார் மாதிரியே இருக்காரு என கிண்டலாக கமெண்ட் செய்தார். இதைப் பார்த்து கடுப்பான செய்தார். டேய் சாவடிச்சிடுவேன், ஓடிரு என திட்டிய பதிவு இணையத்தில் செம வைரல் ஆகிவிட்டது.

siddharth-tweet
siddharth-tweet

இந்த பதிவு விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும் இணையத்தில் ட்ரெண்டிங் தான். சித்தார்த் தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தில்தான் நடிக்க வேண்டும் என பல இயக்குனர்களிடம் புதிய புதிய கதைகளை கேட்டு வருகிறாராம்.

Trending News