வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நண்பன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த சித்தார்த்.. அதுவும் யாருக்கு பதிலா தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார், அதன்பிறகு சித்தார்த்திற்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உருவாகினர். அப்போது சித்தார்த்தின் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பும் இருந்தது.

பின்பு சித்தார்த்திற்கு ஏகப்பட்ட காதல் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி சாக்லேட் பாயாக வலம் வந்தார். இருந்தாலும் சித்தார்த்திற்கு ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை வந்ததால் அதன் பிறகு ஆக்சன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்.

சித்தார்த்திற்கு காதல் படங்கள் வெற்றி அடைந்த அளவிற்கு ஆக்சன் படங்கள் கைகொடுக்கவில்லை. தற்போது வித்தியாசமான கதைக்களம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

பல வருடங்களுக்கு முன்பே விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு சித்தார்த்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் அப்போது சித்தார்த் ஏகப்பட்ட படங்களில் நடித்ததால் விஜய் படத்தில் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார். அதாவது சித்தார்த்தை வைத்து பாய்ஸ் என்ற படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம்தான் சித்தார்த் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது முதல் பட இயக்குனரான ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அப்போது சித்தார்த்திற்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் தான் ஷங்கர் சித்தார்த் கதாபாத்திரத்திற்கு ஜீவாவை நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் நண்பன் படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சித்தார்த் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததைப் பற்றி சில வருடங்கள் கவலை பட்டதாகவும் ஆனால் இனி விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Trending News