சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிளேபாய் லிஸ்டில் இருந்து பேமிலி மென் ஆன சித்தார்த்தின் புகைப்படம்.. அதுக்குன்னு கல்யாணம் எல்லாம் இல்ல

Actor Siddharth: நெருப்பில்லாமல் புகையாதுன்னு சொல்வாங்க. ஆனா இது எந்த விஷயத்துல சரியா இருக்குதோ இல்லையோ சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு சரியாக இருக்கும். ஒரு ரெண்டு பேரைப் பற்றி வதந்தி வருகிறது என்றால் முதலில் அவர்கள் இல்லை என்று தான் தலையாட்டுவார்கள்.

வதந்தி சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு விஷயம் நடந்திருப்பதால் தான் அந்த செய்தி வெளியாகி இருக்கிறது என அதை அடுத்து தெரிந்து விடும். சினிமாவில் நிறைய ஜோடிகள் காதலிக்கிறார்கள் என செய்திகள் வெளியாகி அது பொய்யாகி போனதும் உண்டு.

என்னப்பா இவங்க ரெண்டு பேரும் காதலிச்சாங்களாம் என்று நாமே ஆச்சரியப்படும் அளவுக்கு வெளியில் தெரியாமல் வேலையை பார்த்தவர்களும் உண்டு. பாய்ஸ் படத்தில் முன்னா கேரக்டர் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானவர் சித்தார்த்.

இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோ ஆனார். குறுகிய காலகட்டத்திலேயே தென்னிந்திய சினிமாக்களில் ரொம்பவும் பிரபலமான ஹீரோவாக இருந்தார்.

சித்தார்த்தை முன்னணி ஹீரோ என்று சொல்லி விட முடியாது, பீல்ட் அவுட் ஆகாமல் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு திறமையோடு இருக்கிறார். சமீபத்தில் தமிழில் இவர் நடித்து வெளியான சித்தா படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

திருமண செய்தி

சித்தார்த்துடன் நடிகைகள் கிசுகிசுக்கப்படுவது வழக்கமான ஒன்று. அதேபோலத்தான் காற்று வெளியிடை படத்தின் ஹீரோயின் அதிதி ராவ் கூட என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால் நேற்று இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி வந்தது.

மகா சமுத்திரம் என்னும் படத்தில் இணைந்து நடித்த போது இரண்டு பேரும் காதலிக்க தொடங்கியதாக ஏற்கனவே செய்தி வெளியானது. அவ்வப்போது இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகும்.

ஆனா இது என்ன திடீர்னு கல்யாண செய்தி வருதுன்னு எல்லாருக்கும் ஆச்சரியமா தான் இருந்துச்சு. அதற்கு சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவருமே விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றதெல்லாம் பொய், நிச்சயதார்த்தம் ஆயிடுச்சு என சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

சித்தார்த் அதிதி ராவ் நிச்சயதார்த்தம்

Sid Aditi Engaged
Sid Aditi Engaged

ஆமா ஒரு வழியா பிளேபாயா சுத்திகிட்டு இருந்த சித்தார்த் ஃபேமிலி மேன் ஆகப் போகிறார். சித்தார்த் மற்றும் அதிதி இருவருமே ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர்கள். சித்தார்த் ஏற்கனவே நடிகை ஸ்ருதிஹாசன் உடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பதாக சொல்லப்பட்டது.

அப்பறம் அவர்கள் இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது. அதேபோன்று நடிகை சமந்தா மற்றும் சித்தார் இருவரும் காதலித்து வந்தார்கள். சமந்தா இதற்காகத்தான் இந்துவாக எல்லாம் மாறினார். இருவருக்கும் திருமணம் நடப்பதற்கான பரிகார பூஜை கூட ஒரு பிரபல கோயிலில் நடத்தப்பட்டது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

Trending News