Indian 2: ஆட்ட கடிச்சு, மாத கடிச்சு கடைசியில மனுஷனை கடிக்கிறதுன்னு சொல்வாங்க. அப்படி ஒரு வேலையை தான் கமலிடமே பார்த்திருக்கிறார் நடிகர் சித்தார்த். பொதுவாக சித்தார்த் திறமையான நடிகர் என்றாலும், அவருடைய பேச்சில் கொஞ்சம் ஓவர் ஆட்டிட்யூட் எப்போதுமே இருக்கும்.
ஒரு சிலர் அதை ரசித்தாலும் ஒரு சிலருக்கு சுத்தமாக பிடிக்காது. சித்தார்த்திற்கு சித்தா படத்திற்கு முன்பு வரை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஹிட் படங்கள் எதுவுமே இல்லை. ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை தான் ஓரளவுக்கு டீசன்ட் ஹிட் கொடுத்தது.
கமலிடம் வாலாட்டி பார்க்கும் சித்தார்த்
அந்த சமயத்தில் தான் சித்தார்த் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் இந்தியன் 2 எடுத்து முடிப்பதற்குள் சித்தா படம் ரிலீஸ் ஆகி அவருடைய மார்க்கெட்டை உயர்த்தி பிடித்தது. இதனால் தற்போது சித்தார்த்திற்கு தலைகால் புரியவில்லை.
வெற்றி களிப்பை யாரிடம் காட்டுகிறோம் என்று கூட புரியாமல் ஆண்டவரிடமே கை வைத்திருக்கிறார். இந்தியன் 2 படக் குழுவினரிடம் ஓவர் கிராக்கி காட்டி வருகிறாராம். கமலுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ அதே அளவுக்கு எனக்கும் சகலமெல்லாம் நடக்க வேண்டும் என்கிறார்.
அது மட்டும் இல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் விழாக்கள் எதிலுமே கலந்து கொள்வதில்லை என்று வேற பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கமலையும் தாண்டி சித்தார்த்தின் முகத்தை வெள்ளி திரையில் காட்டி மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே இயக்குனர் சங்கர் தான். அப்படி இருக்கும்போது அவரிடமே வேலை காட்டி வருகிறார் சித்தார்த்.
கமல் பட அப்டேட்டுகள்
- தசாவதாரத்தை விட இரண்டு மடங்கு கெட்டப் போட்டு அசத்த போகும் கமல்
- கமலை நம்பி காசை வாரி இறைக்கும் பிரபலம்
- அவ்வை சண்முகி ரிட்டன்ஸ்