பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் துணை இயக்குனராகவும் இருந்தவர்.
சித்தார்த் நடிகர் மட்டுமின்றி பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை, எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர். கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்றவர். திரைப்படத்தில் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை பொறுத்து கதைகளை தேர்ந்தெடுத்து, எதார்த்தமாக நடிப்பதில் வல்லவர்.
சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன்பு பாஜக முக்கிய பிரமுகர் குறித்த சர்ச்சையில் ட்ரெண்டிங்கில் இருந்தார். அந்த சர்ச்சையில் கொலை மிரட்டல் வந்த போதும் அதை சாமர்த்தியமாக சமாளித்தார்.
நடிகர் சித்தார்த் நடிப்பதோடு இல்லாமல் சமூக ரீதியாகவும் பல செயல்களில் ஈடுபடுபவர் கடலூர் வெள்ளத்தின் போது உதவிய நடிகர் சித்தார்த் ஆவார். தனுஷ் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த அசுரன் படம் தெலுங்கில் ரீமேக்காகி “நாரப்பா” என்ற தலைப்பில் வெளிவந்தது.
அம்மு அபிராமி, வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 60 வயது ஹீரோவுக்கு 21 வயது நடிகை ஜோடியா என்று ஒரு ரசிகர் கேட்டிருக்க, 40 வயது சித்தார்த்துக்கு 20 வயது நடிகை ஜோடியாக நடிப்பது பற்றி ரசிகர் விமர்சிக்கிறார்.
இந்தக் கேள்வியை சித்தார்த்துக்கு டேக் செய்து கேட்டதால் அவரும் பதிலளித்துள்ளார். இதனை கேட்டு கோபம் கொண்ட சித்தார்த் மற்ற ஹீரோக்களின் வயசு பற்றிய விவகாரத்தில் “நான் எப்படி உனக்கு ஞாபகம் வந்தேன்?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.