
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், சக்தி பிசினஸ் பார்ட்னஸ் பத்தி ஜனனிடம் சொல்ல வேண்டும் என்று ஜனனியை வரச்சொல்லி டெக்ரேசன் பிசினஸில் பார்ட்னராக சேர்ந்திருக்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் சந்தோஷப்பட்ட ஜனனி, சக்திக்கு வாழ்த்துக்களை சொல்லி யாருடன் சேர்ந்து பண்ணுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு சக்தி என்னுடைய நண்பர் என்று சொல்லிய நிலையில் ஜனனி அவர் எனக்கு தெரியுமா என்று கேட்கிறார்.
அதற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் சக்தி அங்கே இருந்து கிளம்பி விடுகிறார். அந்த வகையில் ஜனனிடம் மறைக்கும் அளவிற்கு சக்திக்கு மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் குணசேகரன் வீட்டில் குந்தவை வந்து இருக்கிறார். குந்தவை ஏன் குணசேகரன் வீட்டிற்கு வரவேண்டும், எதற்கு சக்தியிடம் பார்ட்னர் என்று ஆசை காட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருக்க வேண்டும் என்பது இப்பொழுது தான் புரிகிறது.
அதாவது இதற்கு பின்னணியில் குணசேகரன் தான் இருந்து காய் நகர்த்திருக்கிறார். குணசேகரன் தான் குந்தவையை வைத்து பிளான் பண்ணி இருக்கிறார். அவர் தான் கல்யாண வேலைகளை பார்க்கிறார் என்று தெரிந்து கொண்டுதான் சக்தியை கோர்த்து விட்டிருக்கிறார். அந்த வகையில் சக்தியிடம் குந்தவை வாங்கிய கையெழுத்து ஏதோ ஜனனிக்கு ஆப்பு வைக்கும் விதமாக இருக்கிறது. சக்தியிடம் இருந்து ஜனனியை பிரித்து விட்டு குந்தவை சேர்த்து வைக்கலாம் என்று குணசேகரன் பிளான் பண்ணிவிட்டார்.
அப்படித்தான் எல்லாம் நடைபெற்று வருகிறது, இது எதுவும் தெரியாத சக்தி அதிர்ச்சியாகிய நிலையில் தற்போது இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்பத்திலேயே தான் இருக்கிறார். இதையெல்லாம் தொடர்ந்து அறிவுக்கரசி, குடும்பத்துடன் வந்து குணசேகரன் வீட்டில் தங்க வந்து விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரன் சொத்தை அபகரித்து அங்கு இருப்பவர்களை ஓட ஓட விரட்ட போகிறார். அதற்கான பிள்ளையார் சுழியும் போட்டுவிட்டார்.
இந்த கதிர் வேற சொத்து மட்டும் நமக்கு கிடைத்தால் போதும் என்ற அல்பத்தனமான ஆசையில் குணசேகரனை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார். வீட்டை விட்டுப் போன நான்கு பெண்களும் தற்போது தங்கும் இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிக்கல்களில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். இதை எல்லாம் ஆட்டிப்படைக்கும் விதமாக அறிவுக்கரசி அரங்கேற்றத்தை ஆரம்பித்து விட்டார்.