புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இரண்டு சைமா விருதுகளை தட்டி தூக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. என்னென்ன படங்கள் தெரியுமா.?

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழி படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது விழா ஹைதராபாத்தில் நேற்று துவங்கியது.

இந்த விருது விழாவில் தமிழ் படங்களும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை குவித்து வருகின்றன. நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரறைபோற்று படம் மட்டும் சுமார் 7 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இதுதவிர தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு சைமா விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின் மட்டுமல்லாமல், தங்கை, இரண்டு குழந்தைகளுக்கு தாய் என அனைத்து வேடங்களையும் ஏற்று தத்ரூபமாக நடித்து வருகிறார். இவரது நடிப்பு பரவலாக அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

அந்த வரிசையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த க/பெ ரணசிங்கம் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான சைமா விருதை பெற்றுள்ளார். இப்படத்தில் அரியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முழு படத்தையும் சுமந்து சென்றிருப்பார். இவரது கதாபாத்திரமே படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரமாக அமைந்திருந்தது.

aishwarya-rajesh-siima2021
aishwarya-rajesh-siima2021

இதுதவிர தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்ததற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் தட்டி சென்றுள்ளார். தமிழ் நடிகையான இவர் தெலுங்கில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளது தமிழ் நடிகர்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. வாழ்த்துக்கள் மேடம்..

Trending News