வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சில்க்கிற்கு மிகவும் பிடித்த நடிகர் இவர்தானாம்.. காஸ்ட்லியான பொருளை வாரி கொடுத்த சம்பவம்

கோலிவுட்டின் மர்லின் மன்றோ என ரசிகர்களால் புகழப்பட்ட நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா மட்டுமே. அந்த சமயத்தில் அழகான பல நடிகைகள் இருந்தனர். ஆனாலும் சில்க் அளவிற்கு யாருமே பிரபலமாகவில்லை. அவரின் அழகே அவரின் நிறம் தான். டஸ்க்கி ஸ்கின்னில் இவ்வளவு அழகா என பொறாமைப்படும் அளவிற்கு சில்க் வலம் வந்தார்.

இவர் பின்னால் சுற்றாத நடிகர்களே இல்லை. அனைத்து நடிகர்களுக்கும் சில்க் என்றால் அவ்வளவு இஷ்டம். நடிகர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் தான். புதிதாக ஒரு படம் வெளியானால் அந்த படத்தில் சில்க் இருக்கிறாரா? அல்லது ஒரு பாடலுக்காவது ஆடியுள்ளாரா என்று கேட்டு தான் படத்திற்கு செல்வார்கள்.

அதெல்லாம் ஒரு காலம். எந்த ஒரு நடிகைக்கும் இப்படி ஒரு பிரபலம் கிடைக்கவில்லை. ஆனால் சில்க் அதையெல்லாம் சாதித்து காட்டினார். அதுமட்டுமல்ல இவர் அளவிற்கு தைரியமான நடிகையும் தமிழ் சினிமாவில் கிடையாது. இப்படி கோலிவுட்டில் அழகு பதுமையாக வலம் வந்த சில்க்கை பலரும் விரும்ப அவருக்கு பிடித்தது என்னவோ வில்லன் நடிகர் தானாம்.

ஆமாங்க இப்போ வில்லனா பல படங்களில் நடித்து அசத்தியுள்ள நடிகர் மன்சூர் அலிகானை தான் நடிகை சில்க்கிற்கு மிகவும் பிடிக்குமாம். மன்சூர் அலிகான் நடிகராவதற்கு முன்பு படங்களில் குரூப் டான்சராக தான் பணியாற்றினாராம். நடிகை சில்க் ஆடும்போது அவருக்கு பின்னால் மன்சூர் அலிகான் பல பாடல்களில் ஆடியுள்ளாராம்.

அந்த சமயத்தில் இருந்து அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளார்கள். ஆனால் நடிகர் மன்சூர் அலிகானை சில்க்குக்கு மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் மன்சூர் கூறிய ஒரே ஒரு காரணத்திற்காக ராஜாதி ராஜா மார்த்தாண்டம் படத்தில் சில்க் நடித்தாராம்.

அதுமட்டும் இன்றி சில்க் பயன்யடுத்திய விலை உயர்ந்த கார் ஒன்றையும் மன்சூர் அலிகானுக்கு பரிசாக வழங்கி விட்டாராம். அந்த அளவிற்கு மன்சூரை அவருக்கு பிடிக்குமாம். ஆனால் அவர்களுக்குள் அப்படி என்ன உறவு இருந்தது என்று தற்போது வரை யாருக்குமே தெரியவில்லை.

Trending News