வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அந்த ஆளுக்கு கூட நடிக்க முடியாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிய சில்க்.. கெஞ்சி கூத்தாடிய இயக்குனர்

Actress Silk Smitha: சில்க் ஸ்மிதா அந்த காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் அவரது வளர்ச்சி சினிமாவில் மிகவும் பெரியது. அதுமட்டும்இன்றி ஏதாவது படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவரது புகைப்படம் போஸ்டரில் இடம் பெறுமாம்.

ஏனென்றால் சில்க் நடித்திருந்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி என்று ரசிகர்கள் நம்பியிருந்தனர். இந்த சூழலில் டாப் நடிகர்கள் பலரும் சில்குடன் ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியது உண்டு. அப்படிதான் பிரபல ஹீரோ ஒருவர் சில்க் உடன் நடிக்க பெரிதும் ஆசைப்பட்டு இருக்கிறார்.

Also Read : அடுத்த சில்க் ஸ்மிதா நாங்கள் தான் என போட்டி போட்ட 5 நடிகைகள்.. அட எல்லாமே டி ஆர் கண்டுபிடிப்பு தான்!

ஆனால் அந்த ஆளு படத்தில் எல்லாம் என்னால் நடிக்க முடியாது என முதலில் மறுத்து இருக்கிறார். அதாவது அந்த காலத்தில் ரஜினி, கமலுக்கு பிறகு சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்தார் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லனாக நடித்தாலும் அதன் பிறகு கதாநாயகனாக படங்களில் கலக்கி வந்தார்.

இந்த சூழலில் சில்க் மீது மிகவும் ஆசைப்பட்ட சத்யராஜ் ஒரு படத்திலாவது அவருடன் நடிக்க வேண்டும் என்று எண்ணி உள்ளார். இதனால் இயக்குனர் சில்க்கை அணுகிய போது அவரது மூஞ்சி எப்படி இருக்கு பாருங்க, இவ்வளவு உயரமான ஆள் கூட என்னால் நடிக்க முடியாது என மறுத்து இருக்கிறார் சில்க்.

Also Read : திருமணத்திற்காக பிரபலத்திடம் கெஞ்சிய சில்க் ஸ்மிதா.. கடைசியில் உயிர் போன பரிதாபம்!

அதன் பின்பு இயக்குனர், சத்யராஜ் ஜமீன்தார் வீட்டு குடும்பத்து பையன், அவர் ரொம்ப நல்லவர் என சில விஷயங்களை சில்க் இடம் எடுத்துரைத்துள்ளார். அதன் பிறகு ஒரு வழியாக சத்யராஜ் உடன் நடிக்க சில்க் சம்மதித்தாராம். அப்போது தான் கனம் கோட்டார் அவர்களே படத்தில் சத்யராஜ் உடன் இணைந்து சில்க் நடித்திருந்தார்.

அதன் பிறகு சத்யராஜின் குணம் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் அவர் பேசும் விதம் என எல்லாமே சிலுக்குக்கு பிடித்து போய்விட்டதாம். இதனால் அடுத்தடுத்த படங்களில் சத்யராஜ் உடன் சில்க் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். முதலில் மோதலாக ஆரம்பித்த இவர்களது அறிமுகம் அதன் பிறகு நட்பாக பல வருடங்கள் தொடர்ந்து வந்திருக்கிறது.

Also Read : படப்பிடிப்பில் நம்பியாரை அசிங்கப்படுத்திய சில்க் ஸ்மிதா.. பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட வில்லாதி வில்லன்

Trending News