திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. இத்திரைப்படத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக சில்க் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரது உண்மையான பெயர் விஜயலட்சுமி, ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் சினிமாவிற்காக தனது பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்டார்.
முதல் படத்தில் சில்க் கதாபாத்திரம் மக்கள் மனதில் பதிந்து விடவே ஸ்மிதா என்ற அவரது பெயருடன் சில்க்கை இணைத்து சில்க் ஸ்மிதா என்று எல்லோரும் அழைத்தனர். தமிழ்சினிமாவில் சிலுக்கை வண்டிச்சக்கரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் வினுசக்கரவர்த்தி அறிமுகம் செய்துவைத்தார்.
சினிமாவில் ஈடு இணையற்ற கவர்ச்சிக் கன்னியாக சில்க் வலம் வந்தார். பெரிய இயக்குனர் படமானாலும் பெரிய ஸ்டார் படங்களானாலும் வெற்றிக்கு தன்னுடைய கவர்ச்சி நடனம் அவசியம் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியவர் சில்க். இயக்குனர் பாலுமகேந்திரா திரைப்படங்களில் அதிக கவர்ச்சி உடனே காட்டப்பட்டார்.
நீங்கள் கேட்டவை, மூன்றாம் பிறை போன்ற திரைப்படங்களில் மிக அளவு குறைந்த உடைகளே சில்க் ஸ்மிதாக்கு வழங்கப்படும். அதையும் பாலுமகேந்திரா தான் போட்டுவிடுவார். நீங்கள் கேட்டவை படத்தில் சில்க் நடனமாடிய அடியே மனம் நில்லுனா நிக்காதடி என்ற பாடல் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதேபோல் பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை படத்தில் சில்க் கவர்ச்சி வேடம் ஏற்றிருந்தாலும், கவர்ச்சி நடனம் ஆடியிருந்தாலும், அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் சில்க் தான். 80களில் ரஜினி, கமல் படங்களில் சில்க் நடனமாடிய ஒரு பாடல் தேவைப்பட்டது. சில்க்கின் ஒரு பாடல் படத்தில் இடம் பெற்ற அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது இயக்குனர்களின் நம்பிக்கையாக இருந்தது.
சில்க்கு பணத்தின் மீது விருப்பம் இருந்தது இல்லையாம் உடனே இரண்டு நாட்கள் கால்ஷீட்டை கொடுத்து விடுவாராம். பொது நிகழ்ச்சிகள், ரசிகர்களை பார்ப்பது என எதிலும் கலந்து கொள்ளமாட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்.
அப்பொழுது ஒரு டாக்டர் சில்க்கு அறிமுகமாகி அவருக்கு போதை மாத்திரையை வழங்கி வந்தாராம். பின்னாளில் அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்ட சில்க் பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க்கின் மரணம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.