80களின் கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா. இவரது நினைவு நாளில், இவரைப்பற்றிய நெகிழ்ச்சியான நிகழ்வு. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் அவர்களுடன் நடித்தவர் சில்க் ஸ்மிதா. இவரது கால்ஷீட்டுக்காக நடிகர்களும், இயக்குனர்களும் காத்துக்கிடந்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 450 க்கு மேல் படங்களில் நடித்துள்ளார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். 1980களில் இவரது ஒரு பாடலாவது படத்தில் இடம் பெற வேண்டும் என இயக்குனர்கள் விரும்பினார்கள். அதேபோல் அப்பொழுது வெளியான படங்களில் அவரது ஒரு பாடலாவது இருக்கும்.
சில்க் வெளிநாடுகளில் நடைபெற்ற ஸ்டார் நைட் என்ற ஷோக்கு அழைக்கப்பட்டிருந்தார். லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் என கூறும்பொழுது முதலில் தயங்கினார், பின்பு பத்திரமாக அழைத்து சென்று அழைத்து வருகிறோம் என்று சொன்னவுடன் சில்க் ஒத்துக்கொண்டார்.
அப்போது ஒரு நாட்டிற்கு 2000 என நான்கு நாடுகளுக்கு 8000 ரூபாயை அவரிடம் கொடுத்த பொழுது எனக்கு வேண்டாம் நான் இந்த நாடுகளை சுற்றி பார்த்தது கிடையாது. முதல்முறையாக சென்றேன், அங்குள்ள மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அளவே இல்லை என்று அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டாராம்.
சில்க் அவரது வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகளின் திருமணத்திற்கு அவரது அறையில் உள்ள நகைகளை அள்ளிக் கொடுத்தாராம். அனைவருக்கும் உதவும் மனம் கொண்டவர் என அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய படி இருந்தார் சில்க் ஸ்மிதா. அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து அதிகபடியான மது அருந்தி இருந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் கூறியிருந்தனர். சில்க் ஸ்மிதா மரணம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.