80,90களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. பெண்ணை கண்டு பெண்களை பொறாமைப்படும் அளவுக்கு பேரழகுடன் இருந்த சில்க் ஸ்மிதா தன்னுடைய காந்தக் கண்களாலும், வசீகர பார்வையாலும் அனைவரையும் கட்டிப் போட்டவர்.
இவர் வண்டிசக்கரம் படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சில்க் ஸ்மிதா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். சில்க் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் பாடலுக்கு சேர்ந்து நடனம் ஆடியுள்ளார்.
சில்க் ஸ்மிதா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில்க் படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு சில்க் நடித்த படம் நல்ல வரவேற்பைப் பெறும்.
சிலக் மிகக் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இவரது கால்ஷீட்டுக்காக நடிகர்களும், இயக்குனர்களும் காத்துக்கிடந்தனர். முன்னணி நடிகர்களின் படங்களை விநியோகிஸ்தர்கள் வாங்குவதைவிட சில்க் நடித்திருக்கும் படங்களை வாங்குவதை விருப்பட்டனர்.
பல படங்கள் ஓடாத நிலையில் சிலுக் நடனமாடிய ஒரு பாடலை மட்டும் சேர்த்து போஸ்டரில் சில்க் படத்தை இணைத்து வெளியிடும் திரைப்படங்கள் நன்றாக ஓடி வெற்றி பெரும். இதனால் பல தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றியவர் சில்க் ஸ்மிதா.
அவரிடம் கால்ஷீட் வாங்க தயாரிப்பாளர்கள் கைகட்டி வாய்பொத்தி நின்று கால்சீட் வாங்கக்கூட தயங்குவதில்லை, சில்க் பல தயாரிப்பாளர்களை கடனிலிருந்து மீட்டுள்ளார்.