வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

திருமணத்திற்காக பிரபலத்திடம் கெஞ்சிய சில்க் ஸ்மிதா.. கடைசியில் உயிர் போன பரிதாபம்!

நடிகை சில்க் ஸ்மிதா 80 மற்றும் 90 களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். இவருக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றன. முன்னணி ஹீரோக்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட இவருடைய கால்ஷீட்க்காக காத்திருந்தார்கள். வசீகரமான முக அழகும், சிக்கென்ற உடலமைப்பும் கொண்ட சில்க் ஸ்மிதா அப்போதைய முன்னனி ஹீரோயின்களை தன் அழகால் கிறங்கடித்தவர்.

புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதாவுக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. படப்பிடிப்பில் கூட யாருடனும் பேச மாட்டாராம். இதனாலேயே அவருடைய சொந்த வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவருடைய மரணத்திற்கு கூட யாருக்கும் உண்மையான காரணம் தெரியாது.

Also Read: படப்பிடிப்பில் நம்பியாரை அசிங்கப்படுத்திய சில்க் ஸ்மிதா.. பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட வில்லாதி வில்லன்

அப்போதைய கோலிவுட்டின் முன்னணி நடன இயக்குனராக இருந்தவர் தான் புலியூர் சரோஜா. மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடங்கி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ் என அத்தனை முன்னணி ஹீரோக்களையும் ஆட வைத்தவர். இந்திய சினிமாவில் கோலோச்சிய நடன இயக்குனர் தான் இவர்.

இவர் நட்புடனும், அன்புடனும் பழகக் கூடியவர். சில்க் ஸ்மிதா இவருடன் நெருங்கி பழகி இருக்கிறார். இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்த நிலையில் ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு புலியூர் சரோஜாவின் மகன் வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் சில்க்கிற்கு ரொம்பவும் பிடித்து போனதாம். உடனே அவரிடம் நீ என்னை திருமணம் செய்து கொள், நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read: கடைசி வரை நிறைவேறாத சில்க்கின் ஆசை.. கவனிக்க தவறிய தமிழ் சினிமா

உடனே புலியூர் சரோஜா அவன் உன்னை விட சின்ன பையன், இப்போதுதான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். இனிமேல் தான் அவன் வேலைக்கு எல்லாம் போக வேண்டும். உனக்கு நானே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வருகிறேன் என்று சொன்னாராம். சில்க் ஸ்மிதா உடனே கோபித்துக் கொண்டாராம். சில நாட்கள் வரை அவரிடம் பேசவில்லையாம் . பின்பு பழையபடி நட்புடன் பழகி வந்திருக்கிறார்.

அதன் பின்னர் தான் சில்க் ஸ்மிதா யாரோ ஒரு டாக்டரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. சில்க் இதையும் புலியூர் சரோஜாவிடம் சொல்லி இருக்கிறார். அதிலிருந்து ஒரு வாரத்திலேயே அவர் திருப்பதி சென்று இருந்த போது சில்க் ஸ்மிதா இறந்த செய்தி பேப்பர்களில் வெளியாகி இருக்கிறது. அதைக் கண்டு ரொம்பவும் மனம் உடைந்து போனதாக சொல்லி இருக்கிறார்.

Also Read: கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகைகள்.. நிஜ வாழ்க்கையே வேறு!

Trending News