வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடிகையின் கன்னத்தை பதம் பார்த்த சில்க்.. கடைசி வரை வெறுப்புடன் இருந்த பிரபலம்

Silk Smitha : நடிகை சில்க் ஸ்மிதா இறந்து பல வருடங்கள் ஆகியும் தற்போது வரை அவரது பெயர் தமிழ் சினிமாவில் உச்சரிக்கப்பட்டு தான் வருகிறது. சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான சில்க் தோற்றத்தில் உள்ள நடிகை ஒருவர் நடித்திருந்தார். அந்த காட்சி படத்திற்கு மிகவும் பிளஸாக அமைந்திருந்தது.

இந்த சூழலில் சில்க் இறந்ததற்கு பிறகு அவரைப் பற்றி நல்ல விஷயங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் வாழ்ந்த காலத்தில் சில்க் மிகவும் கோபக்காரர், ஆணவம் பிடித்தவர் என்று தான் பேசப்பட்டது. பிரபல நடிகையின் கன்னத்தில் சில்க் அறைந்து விட்டாராம்.

அதாவது கவர்ச்சி நடிகை என்றாலே சிலுக்குக்குப் பிறகு பெரிதும் பேசப்படும் நடிகை ஷகிலா தான். இந்நிலையில் சில்க் மற்றும் ஷகிலா இருவரும் சகோதரிகளாக ஒரு படத்தில் நடித்திருந்தனர். மேலும் அந்த படத்தில் ஒரு காட்சியில் ஷகிலாவை சில்க் கன்னத்தில் அடிக்க வேண்டுமாம். ஆரம்பத்திலேயே இயக்குனர் இந்த காட்சியை அடுத்து எடுக்க போகிறோம் என்று கூறிவிட்டாராம்.

Also Read : கடத்தல் வழக்கில் சிக்கிய சில்க் ஸ்மிதா.. பின்னணியில் இருந்த பிரபல இசையமைப்பாளர்?

ஷகிலாவுக்கு பயம் இருந்ததால் உடனடி சில்க் ஸ்மிதாவிடம் எப்படி அக்கா அடிப்பீங்க, வலிக்குமா என்று கேட்டிருக்கிறார். அதெல்லாம் ஒன்னும் ஆகாது, ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடக்கிறதோ அதுதான், பயப்பட வேண்டாம் என்று கூறினாராம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சி எடுக்கும் போது ஷகிலாவை ஓங்கி பளார் என்று சில்க் அடித்து விட்டாராம்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் எல்லோர் முன்னிலையிலும் இவ்வாறு கன்னத்தில் அறை வாங்கியதால் ஷகிலா அங்கிருந்து அழுது கொண்டே சென்று விட்டாராம். அதன்பிறகு சில்க் மீது கோபம் இருந்ததாகவும், அவர் இறந்த பின்பு நிறைய நல்ல விஷயங்களை அவரைப் பற்றி கேட்டபின் புரிந்து கொண்டதாக ஒரு பேட்டியில் ஷகிலா கூறியிருந்தார்.

Also Read : மறக்க முடியாத 3 எழுத்து மந்திரம்.. யாருக்கும் தெரியாத சில்க்கின் இன்னொரு முகம்

Trending News