புதன்கிழமை, ஜனவரி 15, 2025

படப்பிடிப்பில் நம்பியாரை அசிங்கப்படுத்திய சில்க் ஸ்மிதா.. பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட வில்லாதி வில்லன்

நடிகை சில்க் ஸ்மிதா இன்றைய இளசுகள் வரை ரசிக்கும் பேரழகி. ஒரு பாடலுக்கு வந்தால் கூட இவருக்காகவே அந்த காலத்தில் படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் போன்ற அப்போதைய முன்னணி ஹீரோக்கள் கூட சிலுக்கின் கால்ஷீட்க்காக காத்திருந்து படம் பண்ணியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு புகழ் பெற்ற நடிகை இவர்.

திரையில் கவர்ச்சி காட்டக்கூடிய நடிகை என்றாலும் அவருடைய குணம் முற்றிலும் மாறுபட்டது. யாருடனும் அந்த அளவுக்கு சகஜமாக பேசாத நடிகை இவர். கவர்ச்சி நடிகையாக லட்சக்கணக்கில் அப்போது அவர் சம்பாதித்தாலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. இளம் வயதிலேயே மறைந்த இவரை பற்றி தற்போது வரை பேசாத சினிமா கலைஞர்களே இல்லை.

Also Read:கடைசி வரை நிறைவேறாத சில்க்கின் ஆசை.. கவனிக்க தவறிய தமிழ் சினிமா

இந்த வரிசையில் புகழ்பெற்ற நடன கலைஞர் புலியூர் சரோஜா சில்க்ஸ்மிதாவை பற்றி ஒரு சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார். நடிகை சில்க் வளர்ந்து வந்த காலகட்டம் என்பது 60களின் ஹீரோக்களான சிவாஜி, ஜெய்சங்கர் போன்றோர் ஆக்டிவாக இருந்த காலம் அதே நேரத்தில் ரஜினி மற்றும் கமல் போன்றோர் வளர்ந்து வந்த நேரம். எனவே இந்த இரண்டு தலைமுறைகளுடனும் பயணிக்க வேண்டியதாயிருந்தது.

அப்போதெல்லாம் சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் மரியாதை பயங்கரமாக இருக்கும். சில்க் ஸ்மிதாவை பற்றி கேள்விப்பட்ட வரைக்கும் அவர் யாருடனும் தேவையில்லாமல் பேசவும் மாட்டார், யாரிடமும் பணிந்து போகும் குணாதிசயமும் அவருக்கு இல்லை. அப்படி இருந்த பட்சத்தில் தான் ஒரு முறை புகழ்பெற்ற நடிகர் எம் என் நம்பியாரை அவர் முன்னாடியே அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

Also Read:கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகைகள்.. நிஜ வாழ்க்கையே வேறு!

ஒரு படத்தில் நம்பியார் வில்லனாக நடித்திருக்கிறார். அதில் நம்பியாரும், சில்க் ஸ்மிதாவும் நடனம் ஆடுவது போல் பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. வயதான அவருடன் ஆட விருப்பம் இல்லாத ஸ்மிதா இவரை எல்லாம் இப்போது யார் நடிப்பதற்கு வர சொன்னார்கள், வயதான காலத்தில் எதற்கு இந்த வேண்டாத வேலை என்று அவர் முன்னாடியே பேசி இருக்கிறார்.

பதறிப்போன புலியூர் சரோஜா உடனே நம்பியாரிடம் போய் மன்னிப்பு கேட்டிருக்கிறார். நம்பியார் கோபப்படாமல் பெருந்தன்மையாக சிரித்துவிட்டு பரவாயில்லை என்று சொன்னாராம். பின்னர் புலியூர் சரோஜா சில்க் ஸ்மிதாவிடம் நீ இந்த பாடலுக்கு ஆடவில்லை என்றால் இனி உன்னுடன் நான் வேலை செய்ய மாட்டேன் என்று மிரட்டி அவரை ஆட வைத்து இருக்கிறார்.

Also Read:சிலுக்கை பார்த்து ஜொள்ளு விட்ட பிரபல இயக்குனர்.. ஆடையை நான் தான் போட்டு விடுவேன் என அடம்

Trending News