வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சில்க் சுமிதாவை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கிய மருத்துவர்.. தற்கொலைக்கு தூண்டிய கள்ளக்காதல்

தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னி என்று இன்றுவரை அனைவராலும் மறக்க முடியாத நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் 17 வருடம் சினிமாவில் இருந்து வந்தார். ஒப்பனைக் கலைஞராக தமிழ் சினிமாவில் இருந்து பொழுது வினுசக்கரவர்த்தி வண்டி சக்கரம் என்ற படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார், அதில் வரும் கதாபாத்திரம் பெயரே இவரது பெயராக மாறியது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 450 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980இல் இவர் நடனம் ஆடாத திரைப்படங்களே இருக்க முடியாது அந்த அளவுக்கு அனைத்து படங்களிலும் இவர் இருப்பார். இவர் பல படங்களில் கவர்ச்சி நடனத்தால் மற்றும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இவர் கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்தை மட்டுமே பெற்றார்.

Also Read : ஷகிலாவிற்கு கன்னத்தில் பளார் என விட்ட சில்க் ஸ்மிதா.. பலநாள் கோபத்தை பழி தீர்த்த சம்பவம்

பின்பு நடிப்பை தாண்டி 3 படங்களை தயாரிக்க செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அவர் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது, மன உளைச்சல் ஏற்பட்டது. இந்த மன உளைச்சலில் இவருக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டது. முதலில் பாக்கு போடுவது அடுத்து மது அருந்துவது அதற்கு அடுத்ததாக போதை ஊசி போட்டுக் கொள்வது என தன்னை அழித்து கொண்டார்.

இந்த போதை ஊசியை போடுவதற்காக ஒரு மருத்துவர் தேவைப்பட்டதால் அந்த மருத்துவர் தன் வீட்டிற்கு வரவழைத்து போதை ஊசி போட்டுக் கொள்வார். அந்த பழக்கம் இருவருக்கும் நாளடைவில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அந்த மருத்துவருக்கு வயதுக்கு வந்த ஒரு மகன் இருக்கிறான் அவன் சினிமாவின் மீது அதிக ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read : இப்படி நடிக்க உங்களுக்கு கூச்சமா இல்லையா.? பிரபல நடிகைக்கு சில்க் ஸ்மிதா கொடுத்த பதிலடி

அந்த இளைஞனின் ஆசையை சில்க் ஸ்மிதா வரவேற்றார் அதற்கான சில உதவிகளும் செய்து வந்தார். இது அந்த மருத்துவருக்கு பிடிக்காததால் இருவரையும் இணைத்து சந்தேகப்பட்டு பேசியுள்ளார். இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த சில்க் ஸ்மிதா இந்த பிரச்சனையும் சேர்ந்து அவரை தற்கொலைக்கு தூண்டியது என செய்திகள் கூறுகின்றன.

வறுமையில் ஆரம்பித்த வாழ்க்கை சினிமாவில் இருந்து கடைசியில் அனாதையாக தற்கொலை செய்துகொண்டார் சில்க் ஸ்மிதா. ஆனால் இன்றும் பல இளைஞர்கள் பேசும் வகையில் அவர் நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர் தனியாக வாழ்ந்து வந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது இதுவே இவர் குடும்பத்தோடு இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று அப்போது உள்ள சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

Also Read : சிவாஜிக்கே மரியாதை கொடுக்காத சில்க் ஸ்மிதா.. தைரியமா? திமிரா?

Trending News