தமிழ் சினிமா கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா இவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது தெரியுமா ? கேட்டால் நீங்களே அசந்து விடுவீர்கள்.
1980 ஆம் ஆண்டு திருப்பூர் மணி அவர்களின் தயாரிப்பில் வண்டிச்சக்கரம் படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது எல்லா கதாபாத்திரத்திற்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்திற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.
அப்போது ஏவிஎம் ஸ்டூடியோ வாசலில் 16, 17 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மாவை பையோடு போனதை பார்த்துள்ளார். அப்போது கண்ணும், உடல் அமைப்பும் சரியாகயிருந்ததால் அவரை தேர்வு செய்துள்ளனர்.
அந்தப் பெண்தான் சிலுக்கு சுமிதா இவரைத் தேர்வு செய்தது வேறு யாரும் இல்லை வினு சக்கரவர்த்தி தான். அது மட்டுமில்லாமல் அந்த படத்திற்கு வினு சக்கரவர்த்தி தான் திரைக்கதை மற்றும் எழுத்தாளர். இப்படத்தில் சிவக்குமாரின் நண்பராக வினுசக்கரவர்த்தி நடித்திருப்பார்.
வினு சக்கரவர்த்தி நிஜவாழ்க்கையில் உதவி ஆய்வாளராகவும் மற்றும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ரயில்வே துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றி உள்ளார்.
சினிமாவில் ஆர்வம் இருந்ததால் அடுத்தடுத்து பல படங்கள் தனது திறமையை மூலம் வெற்றிகண்டு தனக்கென தமிழ் சினிமாவில் இடம் பிடித்தார்.