வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிவாஜிக்கே மரியாதை கொடுக்காத சில்க் ஸ்மிதா.. தைரியமா? திமிரா?

இதுவரை தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்து போயுள்ளனர். ஆனால் தற்போது வரை தனது புகழ் சிறிதும் குறையாத நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா தான். இவர் அளவிற்கு பேரும் புகழும் இதுவரை எந்த ஒரு நடிகையும் பெறவில்லை. அதுமட்டுமின்றி இவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் ஏராளம்.

இத்தனைக்கும் சில்க் ஒரு டாப் ஹீரோயின் கூட கிடையாது. இவர் மெயின் ஹீரோயினாக நடித்தது ஒரு சில படங்கள் தான். ஆனால் கவர்ச்சி நடிகையாகவும், ஒரு பாடலுக்கு மட்டும் என பல படங்களில் தோன்றி ரசிகர்களை தன் அழகால் வசீகரம் செய்த புகழ் சில்க்கை மட்டுமே சேரும். இப்படி ஒரு அழகா என இவரின் அழகை மெச்சாத ஆண்களே கிடையாது.

முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும் கூட அதில் சில்க் உள்ளாரா அல்லது ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா என்று கேட்டு தியேட்டருக்கு சென்ற காலமும் இருந்தது. அந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்த நடிகை தான் சில்க். அந்த சமயத்தில் திரையுலகில் ஆணாதிக்கம் அதிகமாக இருந்த சமயம். அதனால் சில்க் எப்போதும் அதற்கு அடிபணிய மாட்டார்.

அவர் மிகவும் தைரியமான நடிகை என்பதால் யாருக்கும் எதற்கும் பயப்படாமல் இருந்து வந்தார். அப்போது தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது நடிகை சில்க் லாரி டிரைவர் ராஜாகண்ணு என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் நடிகர் சிவாஜி கணேசன் வரும்போது எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்களாம். ஆனால் சில்க் ஸ்மிதா மட்டும் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பாராம். அவ்வளவு பெரிய நடிகர் வரும் போது மரியாதை இல்லாமல் இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்களே என பலர் கேட்டார்களாம்.

அதற்கு சில்க் ஸ்மிதா அவர் அந்த படத்தின் பாட்டிற்கு நடனம் ஆடுவதற்காக குட்டை பாவாடை அணிந்து வந்துள்ளதாகவும். மேலும் அவர் எழுந்து நின்றால் அது அனைவருக்கும் அசௌகரியத்தை கொடுக்கும். இதனால்தான் அவர் அன்று எழுந்து நிற்கவில்லை என்று அதன்பின் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

மற்ற எந்த ஹீரோயினுக்கும் இந்த அளவிற்கு தைரியம் கிடையாது. அந்த வகையில் நிச்சயம் சில்க்கை பாராட்டலாம். ஆனால் சிலர் அவர் மிகவும் திமிர் பிடித்தவர் என்றெல்லாம் விமர்சனம் செய்துள்ளனர். இருப்பினும் சில்க் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ள மாட்டாராம்.

Trending News