80களில் இளைஞர்கள் மட்டுமல்லாது, நடுத்தர வயதினரையும், வயதானவர்களையும் தனது கவர்ச்சியின் மூலம் தூக்கத்தை தொலைக்க செய்தவர் சில்க் ஸ்மிதா. திடீரென ஒருநாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சில்க் ஸ்மிதா. மர்மங்கள் நிறைந்த அவரது வாழ்க்கை இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.
சில்க்ஸ்மிதாவின் தற்கொலைக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை வைத்து நிறைய பேருக்கு உதவி செய்ததாகவும், கடைசியில் அவரது கஷ்ட காலத்தில் உதவி பெற்றவர்கள் அனைவரும் கைவிட்டதாகவும்
அதனால் மனமுடைந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. புகழின் உச்சத்திற்கு சென்ற சில்க்ஸ்மிதா போதை பழக்கத்திற்கு அடிமையாகி அந்த போதை பழக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இப்படி போதையில் ஊறிப்போன அவருக்கு அதிக போதை தேவைப்பட்டதால் போதை மாத்திரைகள் உட்கொள்ளவும் பழகிக் கொண்டார். அந்த போதை மாத்திரைகளை ஒரு டாக்டர் மூலம் பெற்றதாகவும் நாளடைவில் அந்த டாக்டரை மணமுடித்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர்.
சில்க் ஸ்மிதா கல்யாணம் செய்த மருத்துவர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர். அவருக்கு வாலிப வயதில் ஒரு பையன் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பையனை படத்தில் நடிக்க வைப்பதற்காக சில்க் ஸ்மிதா தான் செல்லும் அனைத்து சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், எல்லா இயக்குனர்களிடம் அவருக்காக சிபாரிசு செய்ததாகவும் கூறுகின்றனர்.
சில்க் ஸ்மிதா அந்த பையனுடன் சுற்றுவதை பார்த்த சொந்த தந்தையே, அவனுடன் உறவு வைத்து இருக்கிறாயா என்று கேட்டதாகவும் அதனால் மனமுடைந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகின்றனர்.