வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சில்க் ஸ்மிதா அதே பிறகு இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். சில்க் ஸ்மிதாவை பார்த்து ஏங்காத ஹீரோக்களே கிடையாது.
சினிமாவில் சில்க் ஸ்மிதா வாழ்ந்த கால கட்டங்களில் அவர் தான் ராணியாக இருந்தார். என்னதான் பல அழகான புதிய ஹீரோயின்கள் வந்தாலும் தன்னுடைய கவர்ச்சியாலும் காந்த பார்வையாலும் அனைவரையும் கதர கதர ஓட விட்டவர்.
அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 1989 ஆம் ஆண்டு ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் வெளியான லயணம் படம்தானாம். கில்மா படமாக உருவாகி இருந்த இந்த படம் வசூலில் தாறுமாறு வெற்றி பெற்றதாம்.
அதுமட்டுமில்லாமல் லயனம் திரைப்படம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானதாக தகவல்கள் உள்ளன. அந்தப் படம்தான் சில்க் சுமிதாவின் கடைசி திரைப்படம். அதன்பிறகு மதுவுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டார் சில்க் ஸ்மிதா.
![layanam-silksmitha-lastmovie](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/02/layanam-silksmitha-lastmovie.jpg)
ஆனால் தற்போது யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார். லயனம் படத்தில் நடித்த பிறகு சில்க் ஸ்மிதா குடியால் இறந்தது ஓகேதான். ஆனால் அதே படத்தில் ஹீரோவாக நடித்த நடிகரும் சில்க் ஸ்மிதா இறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டதாக புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து சில்க் ஸ்மிதாவுக்கும் அந்த நடிகருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என நோண்டி நொங்கெடுத்து வருகிறதாம் கோலிவுட் வட்டாரம். சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படம் அனைவருக்கும் ஸ்பெஷல்தான்.