செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆண்டவர் மீதே குறை சொன்ன சில்வண்டு.. ஓவர் ஆட்டிட்யூட்டால் வெறுப்பை சம்பாதித்த பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் ரசிகர்கள் பலரும் ரசிக்கும் வகையில் இருந்தது. அதிலும் ஆண்டவரின் பேச்சும், போட்டியாளர்களின் மனம் நோகாமல் அதேசமயம் கண்டிப்பாக அவர் நடந்து கொண்ட விதமும் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ஆனால் நிகழ்ச்சியில் நடந்த ஒரே ஒரு சம்பவம் தான் கமல் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

அதாவது நேற்றைய நிகழ்ச்சியில் கமல், ஆயிஷாவிடம் ரட்சிதாவின் பொம்மையை எடுத்தது பற்றி கேள்வி எழுப்பினார். தன் மீது தவறு இருந்தாலும் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அவர் எனக்கு புரியல என்று ஏதோ உளறியபடி பதிலளித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு கமல் சரியான வார்த்தைகளை பிடித்து கேட்டதும் ஆமா அசீம் சொல்லித்தான் செய்தேன்.

Also read : பொண்ணுங்களை தடவி ரொமான்ஸ் செய்தததற்கு சம்பளத்தை வாரி கொடுத்த பிக்பாஸ்.. கொடுத்த வச்ச கோளாறு

ஆனால் இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது என்று மாற்றி மாற்றி பேசி பார்ப்பவர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் நான் ரட்சிதாவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நீங்கள் நான் திட்டம் போட்டு அப்படி செய்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று ஆண்டவரிடம் ஓவராக பேசினார்.

அவருடைய இந்த பேச்சால் போட்டியாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியை காண வந்த ஆடியன்ஸும் அதிர்ந்து தான் போனார்கள். ஆனால் கமல் இதை சாதுரியமாக கையாண்டார். அவர் அப்படி பேசியதும் கமல் சிரித்தபடி என்னுடைய கேரக்டரை பற்றி தான் நான் பேச முடியும். உங்களை கேரக்டரை பற்றி பேச எனக்கு தெரியாது என்று நாசுக்காக ஒரு குட்டு வைத்தார்.

Also read : மன்மத ராசாவை வீட்டை விட்டு துரத்திய ஆண்டவர்.. வெளியேறும் போதும் செய்த சில்மிஷ சேட்டை

அதன் பிறகும் கூட அடங்காத ஆயிஷா குரலை உயர்த்தி கமலிடம் பேசினார். இதை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆயிஷாவை கண்டபடி திட்டி வருகின்றனர். மேலும் சோசியல் மீடியாவிலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமல் எவ்வளவு பெரிய நடிகர் அவரிடம் பேசும் போது மரியாதையாக பேச வேண்டாமா, சில்வண்டு போல் இருந்து கொண்டு உனக்கு அவ்வளவு திமிரா என்று ஆயிஷாவுக்கு எதிராக பல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

அதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிலும் ஆயிஷாவுக்கு எதிராக பலர் திரும்பியுள்ளனர். ஏனென்றால் ஆயிஷா தன்னுடைய சிறு உடல் நலப் பிரச்சனையை பெரிதாக காட்டி சீன் போடுவதாகவும் போட்டியாளர்கள் கருதுகின்றனர். மேலும் தேவையில்லாமல் குரலை உயர்த்திப் பேசி கடுப்பேற்றும் ஆயிஷாவுக்கு இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பல சம்பவங்கள் நடக்க இருக்கிறது என்பது தற்போது வெளிவரும் ப்ரோமோக்களின் மூலம் தெளிவாக தெரிகிறது.

Also read : நாமினேஷன் மூலம் பழிக்குப் பழி தீர்த்த ஹவுஸ் மேட்ஸ்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர்

Trending News