சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜயகாந்துக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சில்வர் ஜூப்ளி ஹீரோ.. ஒரே நாளில் முட்டி மோதிய படங்கள்

Silver Jubilee Hero who taught acting to veteran Actor Vijayakanth: பெரிய சாதனைகள் நிகழ்த்தும் போது பார்வைக்கு தெரிவதை மட்டுமே கொண்டாடும் நாம் அதற்கு பின் இருக்கும் உழைப்பை பெரிதாக கண்டு கொள்வதில்லை. அதே சமயம் முயற்சியுடன் கடின உழைப்பும் இருந்தால் காலம் அவரை எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி கஷ்டப்பட்ட நிலையில் விஜயகாந்த் அவர்கள் 1982 சிவந்த கண்கள் படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மதுரையைச் சேர்ந்த குமரேசன் ஆவார். இருவரும் மதுரை என்பதால் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்தது.

முதலில் விஜயகாந்திற்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த ராமநாராயணன் பின்னாளில் அவரது இயக்கத்திலே சிவந்த கண்களுக்கு பச்சைக்கொடி காட்டினார். வசனங்கள் கற்றுத் தந்த குமரேசனுக்கு விஜயகாந்தின் நடிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட அவரது நடிப்பை உற்று நோக்கி பின்னாளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த துவங்கினார் குமரேசன். இந்த குமரேசனே பின்னாளில் கரகாட்டக்காரன் ராமராஜன் ஆவார்.

Also read: தமிழ் சினிமாவில் ஹீரோவை மிஞ்சிய ஸ்மார்ட் வில்லன்கள்.. 90களில் அழகில் மிரட்டிய விஜயகாந்த்தின் உயிர் நண்பன்

அதன் பிறகு ராமராஜன் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் விஜயகாந்த், ராமராஜன் இருவரின் படங்களும் திரையில் போட்டியிட துவங்கின. விஜயகாந்த் அண்ணாந்து பார்க்கும் அளவு ராமராஜனின் வளர்ச்சி இருந்தது. 1987 தமிழ் புத்தாண்டின் போது ரிலீஸ் செய்யப்பட்ட விஜயகாந்தின் வீரபாண்டியனும் ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படங்களும்  மாபெரும் வெற்றி பெற்றது. 80, 90ஸ் காலகட்டத்தில் ரஜினி கமல் போன்று விஜயகாந்த் ராமராஜன் இருவரும் கிராமத்து இளைஞர்கள் கொண்டாடும் நடிகர்களாகவே இருந்தனர்.

விஜயகாந்த் திமுக கட்சியில் இருந்தபோது கலைஞர் விஜயகாந்திற்கு திருமணம் செய்து வைத்தார். அதே போன்று ராமராஜனுக்கு புரட்சி தலைவர் திருமணம் செய்து வைத்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார். திரையிலும் வாழ்விலும் எதிரது துருவங்களாக இருந்த இருவரும் மாமன் மச்சான்களாகவே பழகி வந்தனர். நளினியின் உடன்பிறவா சகோதரராக விஜயகாந்த் தீரா அன்பை வைத்திருந்தார்.

விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வந்த ராமராஜன்,விஜி அண்ணாவுக்கு ஆறு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். புரட்சித் தலைவருக்கு பின் அவர் அளவு யாரும் திரைத்துறையில் இவ்வளவு அழகாக சண்டை போட்டது இல்லை. நடிகர் சங்கம், அரசியல் என அனைத்திலும் உச்சம் தொட்டவர் என்றார்.

விஜயகாந்தின் திரை வாழ்வில் எவ்வளவு போட்டி இருந்தாலும் ஒருவரது வாழ்வை மற்றவர் கெடுக்க நினைத்தது இல்லை. ஆரோக்கியமான போட்டியாகவே தொடர்ந்தது. போட்டியாக இருந்தவரும் கண்கலங்கி விடைபெற்ற நிகழ்வு விஜயகாந்த் மறைவின்போது அரங்கேறியது.

Also read:  பிரேமலதா போட்ட கண்டிஷனை காற்றில் பறக்க விட்ட விஜயகாந்த்! செகண்ட் இன்னிங்சில் விஜயகாந்த் பட்டைய கிளப்பிய 5 படங்கள்

Trending News