பல பிரச்சனைகளை சந்தித்த சிம்பு தற்போது மாநாடு படத்தின் வெற்றியால் நிம்மதி அடைந்துள்ளார். தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த சிம்புவிற்கு மாநாடு படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதுவும் சாதாரண வெற்றி அல்ல 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதல் முறையாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது.
இதனால் சிம்புவின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போது சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் முன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்தியுடன் இணைந்து பத்து தல என்ற படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்.
இவ்விரு படங்களையும் முடித்த பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரிக்கும் வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் கொரோனா குமார் என்ற காமெடி படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். இப்படம் சிம்புவிற்கு 49 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சிம்புவின் 50வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் சிம்புவின் 50வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இவர்கள் இணையும் இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாம். இப்படம் நிச்சயம் சிம்புவின் திரையுலகில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சுதா கொங்கரா ஏற்கனவே தமிழில் இறுதிச்சுற்று, சூரரை போற்று போன்ற மெகா ஹிட் படங்களை வழங்கியவர். எனவே நிச்சயம் சிம்புவை வைத்து இவர் இயக்கும் இந்த படமும் வெற்றி படமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.