நடிகர் சிம்புவுக்கும் சுக்கிர தசை ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். மாநாடு என்ற ஒரே ஒரு வெற்றிப்படம் அடுத்த 5 வருடங்களுக்கு அவரை பிசியான நடிகராக மாற்றியுள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை.
சிம்பு நடிப்பில் அடுத்த வருடம் குறைந்தது மூன்று படமாவது வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பத்து தல படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களையும் முடித்தபிறகு ஒரே ஷெட்யூலில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கொரானா குமார் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் சிம்புவின் சினிமா கேரியரில் சூப்பர் ஹிட்டடித்த வானம் படத்தில் வந்த கேபிள் ராஜா கேரக்டர் அளவுக்கு செம கலக்கலாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த மூன்று படத்தையும் முடித்த பின்னர் இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து மிஷ்கின் படம் என அவரது லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்கு சிம்புவின் பாக்கெட் ஃபுல் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அதுமட்டுமில்லாமல் மாநாடு படத்தின் வெற்றியால் சிம்பு வின் சம்பளமும் உயர்ந்து விடும் என்கிறார்கள். படம் ஓடாதப்பவே 10 கோடி சம்பளம் வாங்கிய சிம்பு 100 கோடி வசூலை கொடுத்த பிறகு ஏற்றாமல் இருப்பாரா என்ன.