செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

வசூல் மழையில் மாநாடு.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

நீங்க எல்லாம் நல்லா வரணும் தம்பி என பல வருடமாக சிம்புவைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தவர்களை நீங்க நல்லா வந்துட்டீங்க தம்பி என மாநாடு படத்தின் மூலம் சொல்ல வைத்து விட்டார். கடந்த பத்து வருடங்களில் சிம்புவின் சிறந்த படம் மாநாடு தான்.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வர வேண்டியவர் சிம்பு. ஆனால் தன்னுடைய சோம்பேறித்தனத்தாலும் மெத்தனத்தாலும் அந்த இடத்தை பறிகொடுத்துவிட்டு தற்போது அந்த இடத்தை அடைய துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு சரியான படம் அமையாமலும் தவித்து வந்தார்.

ஆனால் சமீபத்தில் வந்த மாநாடு திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றிபெற்ற சிம்புவின் சினிமா கேரியரை மீண்டும் உச்சத்திற்கு தூக்கி சென்றுள்ளது. மேலும் மாநாடு படம் உலகம் முழுவதும் சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் மட்டும் சுமார் நாற்பத்தி ஐந்து கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம் மாநாடு திரைப்படம். சிம்பு ஒன் சினிமா கேரியரிலேயே தமிழகத்தில் மட்டும் அதிக வசூல் செய்த படம் என்றால் அது மாநாடுதான் என காலரை தூக்கி கெத்தாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர் சிம்பு வாண்டுகள்.

சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாக காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த படங்கள் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அடுத்த சில வருடங்களில் சிம்புவின் சினிமா மார்க்கெட் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News