புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திரும்பி வந்த சிம்பு.. திருதிருவென முழிக்கும் சிவகார்த்திகேயன்

சிம்பு போன்ற பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்கள் கடந்த சில வருடங்களில் சினிமாவில் கொஞ்சம் சறுக்கியதால் அந்த கேப்பில் விறுவிறுவென வளர்ந்து நடிகர்தான் சிவகார்த்திகேயன் என்பது சினிமாவில் உள்ள அனைவருக்குமே தெரியும். இப்போது அவர் வசூல் நாயகனாக உயர்ந்துவிட்டார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

சிம்பு நடிப்பில் கடைசியாக சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் என்று எடுத்துக் கொண்டால் அது விண்ணைத்தாண்டி வருவாயா படம் தான். கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு கௌதம் மேனன் கூட்டணியில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சோபிக்கவில்லை.

அதன் பிறகு சிம்புவின் சோம்பேறித்தனம் அவருக்கு சினிமா வட்டாரங்களில் கொடுக்கப்பட்ட குடைச்சல் ஆகியவை காரணமாக சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி விட்டார். மேலும் அந்த காலகட்டங்களில் குடிக்கு அடிமையாகி உடல் எடை பெருத்து இனிமேல் சிம்பு அவ்வளவுதான் என சொல்லும் அளவுக்கு தன்னுடைய தலையெழுத்தையே மாற்றி எழுதிக் கொண்டார்.

இந்த ஏழு வருடத்தில் தான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை உற்று பார்க்க வேண்டும். வெறும் எட்டு வருடங்களில் ஒரு நடிகர் 100 கோடி வசூல் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் என்றால் அதற்கு அவரது திறமையை மட்டும் காரணம் கிடையாது. முன்னணி நடிகர்களை தவிர வேறு எந்த நடிகரும் இந்த காலகட்டத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு சரியான கமர்சியல் படங்களை கொடுத்து தற்போது கமர்சியல் நடிகராக மாறிவிட்டார்.

ஆனால் உண்மையில் இந்த இடத்திற்கு வர வேண்டியது சிம்பு தான் என்கிறது சினிமா வட்டாரம். சிம்புவும் சரியான படம் நடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை போக்குவதற்கு தான் வந்திருக்கிறது மாநாடு. மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் தலையெழுத்தை மாற்றி எழுதி விட்டது என்றே சொல்லலாம். சிம்பு நடிப்பில் வெளியான படங்களில் நெகட்டிவ் விமர்சனமே இல்லாத படம் என்றால் அது மாநாடு தான்.

மாநாடு படத்தின் வெற்றி சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் மீதான கவனத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. சரியாக சிம்பு இதே மாதிரி தொடர்ந்து இன்னும் ஒரு இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்து விட்டாள் திடீரென முளைத்த சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட்டுக்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

ஆனால் சிலரோ சிவகார்த்திகேயன் தற்போது விஜய் அஜித் ரேஞ்சுக்கு சென்றுவிட்டார் என்பதால் சிம்புவின் இந்த வளர்ச்சி அவரை பெரிய அளவில் பாதிக்காது எனவும் கூறுகின்றனர். இருந்தாலும் சிம்புவின் இந்த வெற்றி சிவகார்த்திகேயனை கண்டிப்பாக யோசிக்க வைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆரோக்கியமான போட்டி நல்லதுதானே.

Trending News