சிம்பு வெங்கட்பிரபு கூட்டணியில் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. சிம்புவுக்கு பக்கா கம்பாக் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. திரையிட்ட இடமெல்லாம் இந்த படம் திருவிழாக் கோலம் பூண்டது.
சிம்புவின் சினிமா வாழ்க்கைக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது. கண்டிப்பாக இந்த படத்திற்கு பிறகு சிம்புவின் சினிமா மார்க்கெட்டை உச்சத்திற்கு சென்றுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல் சிம்புவின் சினிமா கேரியரில் மாநாடு படம் போல் வேறு எந்த படமும் வசூல் செய்தது இல்லை எனும் அளவுக்கு உலகம் முழுவதும் முதல் மூன்று நாட்களிலேயே சுமார் 68 கோடி வரை வசூல் செய்து விட்டதாக படக்குழுவினர் கலந்துரையாடலின்போது தெரிவித்தனர்.
சிம்பு வெங்கட் பிரபு என இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சந்தோசமாக இருக்கும் நிலையில் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சிக்கு இந்தப்படம் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை என அவரே பேட்டிக்கு பேட்டி புலம்பிக் கொண்டிருப்பது பார்ப்பவர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
சிம்புவும் வெங்கட்பிரபுவும் சுத்தமாக மார்க்கெட் இல்லாத சமயத்தில் அவர்களை வைத்து படம் எடுக்க முன்வந்த ஒரே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான். மாநாடு திரைப்படம் 1008 தடங்களுக்கு பிறகு ஒருவழியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரிலீஸ் நாளில் கூட ஏகப்பட்ட பஞ்சாயத்து கிளம்பியது.
இதுகுறித்து சுரேஷ் காமாட்சி கூறுகையில்,சிம்பு மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவருக்கும் மாநாடு படத்திற்கு முன்பு மார்க்கெட் இல்லாததால் இந்த படம் பெரிய அளவுக்கு வியாபாரம் ஆகவில்லை எனவும், படத்தை வாங்கியவர்கள் அனைவரும் லாபத்தை ஈட்டிய நிலையில் ஒரு தயாரிப்பாளராக எனக்கு இந்த படம் பெரிய திருப்தி கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அனேகமாக வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்தாலும் எடுப்பார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.