சிம்பு நடிப்பில் பல தடைகளை தாண்டி இன்று வெளியாகியுள்ளது மாநாடு திரைப்படம். அதுவும் காலை காட்சிகளின் போது ஏகப்பட்ட சிக்கல்கள் வந்த நிலையில் காலை எட்டு மணிக்கு தான் முதல் சோ போடப்பட்டுள்ளது. படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை ரசிகர்களின் இயக்கமாக இருக்கிறது.
கடந்த சில வருடங்களில் சிம்பு நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் என்றால் அது மாநாடு தான். மேலும் இந்த படத்தின் முதல்நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் விற்று தீர்ந்து விட்டதாம்.
அந்த அளவுக்கு ஒரு பெரிய படமாக மாறிய மாநாடு படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என மைக்கேல் ராயப்பன் தன்னுடைய பங்கிற்கு பஞ்சாயத்தை ஏற்படுத்த கடைசி நேரத்தில் படம் வெளியாகுமா ஆகாதா என்ற குழப்பத்திற்கு சென்றது. காலை வரை இந்த பஞ்சாயத்து ஓயவில்லை என்றே கூறுகின்றனர்.
இந்த நேரத்தில் சினிமா நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினிடம் உதவி கேட்க அவரும் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். இங்குதான் அவரது அரசியல் கைவண்ணத்தை அசால்டாக கையாண்டுள்ளார் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை அநியாயத்துக்கு வெறும் ஆறு கோடிக்கு வாங்கி கலைஞர் டிவிக்கு வாங்கி காரியம் சாதித்து விட்டாராம். உண்மையாலுமே இந்த படத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல். ஆனால் அவசர அவசரமாக பணம் தேவைப்பட்ட நிலையில் இந்த டீலை முடித்துவிட்டாராம் தயாரிப்பாளர். இதுதான் ராஜ தந்திரமோ!