ஒரு படம் வெளியாகி அதிரிபுதிரி வெற்றி பெற்றுவிட்டால் போதும் அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என கேள்வி கேட்க தொடங்கி விடுவார்கள். ஒரு சில படங்களில் இரண்டாம் பாகத்திற்கான லீடு படத்தின் கிளைமாக்ஸில் இருக்கும். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் இரண்டாம் பாகத்திற்கான லீட் இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.
இதேபோல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வரும் படம் ஒன்றிலும் இரண்டாம் பாகத்திற்கான லீடு உள்ளதாம். அது வேற எந்த படமும் இல்லை வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் தான். கோலிவுட்டில் ஒரு மாபெரும் சாதனை படைத்து கொண்டிருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல படத்திலும் இரண்டாம் பாகத்திற்கான லீடு இடம்பெற்றுள்ளதாம். டைம் லூப் பாணியில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் இறுதியில் வெங்கட் பிரபு இரண்டு முக்கிய குறியீடுகளை வைத்துள்ளாராம். அதன்படி படத்தில் அப்துல் காலிக் கேரக்டரில் உள்ள சிம்பு அவரது நண்பர்கள் யாருக்காவது இரத்த தானம் செய்தால் அவர்களும் டைம் லூப்பில் சிக்கி கொள்வது போல உள்ளது.
மேலும் மாநாடு படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல் அவரது டிவிட்டர் பக்கத்தில், “படத்தின் முடிவில் இருக்கும் டீசரை மிஸ் பண்ணிவிடாதீர்கள்” என குறிப்பிட்டு மாநாடு-2 என்கிற ஹேஷ்டேகையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் எடிட்டரின் டிவீட் மூலம் மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதியாகியுள்ளது.
ஒரு சில படங்கள் முதல் பாகம் நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாகம் எதேனும் ஒரு வகையில் சொதப்பிவிடும். அந்த வகையில் மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் நன்றாக இருந்தால் சரிதான். ஏனெனில் முதல் பாகம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இரண்டாம் பாகம் சொதப்பாமல் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
