புதன்கிழமை, நவம்பர் 20, 2024

மாநாடு சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்.. எத்தனை கோடி தெரியுமா.?

பொதுவாக ஒரு படத்தின் வெளியீட்டிற்கு பிரச்சனையோ அல்லது சிக்கலோ வருவது சாதாரணம் தான். ஆனால் படமே பிரச்சனையாக இருந்தால் அது சிம்புவிற்கு மட்டுமே நடக்கும். இவர் சிம்பு அல்ல வம்பு நடிகர் என்பதுபோல் எப்போதும் இவரை சுற்றி ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டு தான் உள்ளது. பிரச்சனை இல்லாமல் சிம்புவால் இருக்க முடியாது போல.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் தீபாவளிக்கே திரைக்கு வர வேண்டியது. ஆனால் பல்வேறு காரணங்களால் நவம்பர் 25ஆம் தேதிக்கு வெளியீட்டை தள்ளி வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படம் நாளை வெளியாகாது என டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

படத்தின் தியேட்டரிகல் உரிமை மட்டும் சுமார் 11 கோடிக்கு விற்பனையாகி இருந்ததால் தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரித்ததில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை, மற்றும் ஓடிடி உரிமை விற்பனையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க உள்ளதாக படக்குழுவினர் கூறினர்.

ஆனால் இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் ரகசிய கூட்டம் அமைத்து பேசப்பட்டது. இறுதியில் மாநாடு படத்தின் டிஜிட்டல் உரிமையை சோனி நிறுவனம் 10.5 கோடிக்கு வாங்கி கொள்வதாக கூறியது. இதனை அடுத்து மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் 6 கோடி ரூபாய்க்கு வாங்கி கைப்பற்றியது. இதனை அடுத்தே படம் வெளியாவதில் இருந்த சிக்கல் விலகியது.

தற்போது படம் திட்டமிட்டபடி இன்று அதிகாலை 8 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறப்பு காட்சி மட்டும் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் படம் வெளியானதே போதும் என்பதால் தற்போது உற்சாகத்துடன் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News