புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குடியால் தான் எனக்கு இந்த நிலைமை.. புலம்பிய சிம்பு

நடிகர் சிம்பு தற்போது திரும்பி வந்துட்டேன் டா திரும்பி வந்துட்டேன் டா என்று சொல்லும் அளவுக்கு உடல் எடையையும் குறைத்து மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பத்தில் குண்டாக இருந்த சிம்பு இப்போது செம ஸ்மார்ட் ஆக மாறிவிட்டார்.

சிம்புவின் படங்களுக்கு வழக்கம்போல் பிரச்சனை வருவது போல மாநாடு படத்திற்கும் ஆரம்பத்தில் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள் நடந்தன. இவ்வளவு ஏன் சிம்புவே அந்த படத்தில் ஒரு கட்டத்தில் நடிக்க மாட்டேன் என குறுக்க திரும்ப மொத்த படக்குழுவும் செம அப்செட். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெங்கட்பிரபு சிம்பு ஆகியோருக்கு ஏகப்பட்ட கருத்துவேறுபாடுகள் வந்துள்ளன.

ஆனால் அதையெல்லாம் சமாளித்து ஒருவழியாக படத்தை முடித்து வருகின்ற 25 ஆம் தேதி வெளியிட ரெடியாகி விட்டனர். அதற்கான புரோமோஷனல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ட்விட்டரில் ட்விட்டர் ஸ்பேஸ் இன்பதில் மாநாடு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிம்பு உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சிம்புவிடம் ஏன் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டீர்கள் என கேட்டதற்கு சொந்தமாக ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்ததாகவும் அதனால் குடிக்கு அடிமையாகி உடல் பருமன் கூறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது குடி நான்வெஜ் என அனைத்தையும் விட்டு விட்டேன் எனவும் அதனால் தான் தன்னுடைய உடல் எடையை அப்படியே மெயின்டெயின் செய்ய முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிம்பு படங்கள் வெளிவராமல் முடங்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிம்புவும் சில படங்களில் பாதியில் நடித்துவிட்டு கம்பியை நீட்டினார். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் நடந்த போதிலும் சிம்புவுக்கு துணையாக நின்ற அவரது ரசிகர்களுக்காக தற்போது மீண்டும் தன்னுடைய பழைய வேட்டையை தொடங்க முடிவு செய்துவிட்டதாகவும் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

Trending News