திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

பணத்தை ஆட்டையைப் போட்டது விஷால்., சிம்பு படத்திற்கு தடையா.? கொந்தளித்து வீடியோ வெளியிட்ட பிரபலம்

சில வருடங்களுக்கு முன்பு சிலம்பரசன் எனும் சிம்புவிற்கு (இப்போது STR என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்) நல்ல கம்பேக் கொடு்த்த படம் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” இயக்குனர் மைக்கேல் இயக்கிய இப்படம் பொதுமக்களிடத்தில் பெரும் தோல்வியை சந்தித்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தின் ரிலீசுக்காகா மிகவும் சிரமப்பட்டார் இயக்குனர் மைக்கேல் ராஜ் கடைசியாக சிம்புவுக்கு வரவேண்டிய 3.5கோடிகளை விட்டுக்கொடுத்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற கட்டத்தில் சிம்புவும் அவரின் சம்பள பாக்கியை விட்டுத்தர படம் ஓடியது.

இந்நிலையில் ஐசரிகனேசன் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் “வெந்து தனிந்தது காடு” இப்படத்தின் சூட்டிங்கிற்காக அவுட்டோரில் இருந்த படக்குழுவுக்கோ ஃபெப்சி சம்மேளனம் ரெட் கார்டு தந்தது.

simbu-cinemapettai
simbu-cinemapettai

சிம்புவின் படத்திற்கு ஃபெப்சி ஊழியர்கள் யாரும் பணியாற்றக்கூடாது என்று கூறியது தயாரிப்பாளர் சங்கம்.இது தொடர்பாக ஐசரி கனேசன் எத்தனை விளக்கம் தநதாலும் அதை ஏற்கும் மனநிலையில் இல்லை.

அதற்காக இயக்குனர் டி.ராஜேந்திரன் மனைவியும் சிம்புவின் தாயாருமான உஷா ராஜேந்தர் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதன்படி நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் கடந்த முறை தயாரிப்பாளர் சங்க தலைவராய் இருந்த தருணத்தில் சங்கத்து பணம் 7கோடிகளை விரயம் செய்ததாக கூறிதான் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியையே வசமாக்கியது.

அதனைக்கடந்து எப்போதோ விஷால் தலைவரய் இருந்த தருணத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்காக சிம்புவை விசாரிக்காமல் கொடுக்கப்பட்ட தீர்ப்பையும் எதிர்ப்பதாகவும் மேலும் மேல்முறையீடு செய்வது என்பது எல்லா வழக்குகளுக்கும் பொறுந்தும் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News