புதன்கிழமை, நவம்பர் 20, 2024

நான் கடவுளுக்கு பின் சிம்பு கூட்டணியில் இணைத்த பிரபலம்.. ஆஸ்கர் வாங்க கூட வாய்ப்பு இருக்காம்

ஒரு படம் வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு படத்திற்கு மிகவும் அடிப்படையான விஷயம் என்றால் அது கதைதான். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதுபோல கதை நன்றாக இல்லையென்றால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறாது.

அந்த வகையில் படத்திற்கு கதை எழுதுவதில் திறமைசாலி என்றால் அது எழுத்தாளர் சுஜாதா தான். அவரை போல கதை எழுத யாராலும் முடியாது. தற்போது அவரின் மறைவிற்கு பின்னர் எழுத்தாளர் ஜெயமோகன் அந்த இடத்தை பிடித்து விட்டார். எழுத்தாளர் சுஜாதாவை பயன்படுத்திய பலரும் இப்போது ஜெயமோகனை தான் பயன்படுத்துகிறார்கள்.

அந்த வரிசையில் இயக்குனர்கள் வசந்த பாலன், பாலா, சங்கர், மணிரத்தினத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் கெளதம் மேனனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். ஆம் இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் நடிகர் சிம்பு மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் தான் கதை எழுதுகிறார்.

இயக்குனர் கெளதம் மேனனுடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ள நிலையில், படத்தின் முதுகெலும்பாக எழுத்தாளர் ஜெயமோகன் கதை அமைந்துள்ளது. முன்னதாக ஜெயமோகன் கதையில் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படம் வரலாறு காணாத வெற்றி பெற்றது.

தற்போது வெந்து தணிந்தது காடு படமும் அதேபோல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெந்து தணிந்தது காடு படம் குறித்து பேசிய ஜெயமேகன், “இதே ஒரு மென்மையான நகர்ப்புற காதல் கதை. அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா.

வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது” என கூறியுள்ளார். ஏற்கனவே இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவரின் இந்த வார்த்தைகளால் ரசிகர்கள் இன்னும் ஆர்வமாக உள்ளனர். நான் கடவுள் படத்தின் சாதனையை வெந்து தணிந்தது காடு படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -spot_img

Trending News