திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிம்பு கௌதம் மேனன் படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்.. காதல் ரசம் சொட்ட சொட்ட வழியுதே!

என்னதான் சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய இருவரும் தனித்தனியே படம் வெற்றி தோல்விகளை கொடுத்திருந்தாலும் இருவரும் இணையும் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும்.

ஏற்கனவே சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது மூன்றாவது முறை இந்த கூட்டணி இணைகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியனே என பெயர் வைத்துள்ளனர். டைட்டிலை பார்க்கும்போதே படம் பக்கா காதல் திரைப்படம் என்பது தெரியவருகிறது.

nadhigalizhe-neeradun-suriyan-cinemapettai
nadhigalizhe-neeradun-suriyan-cinemapettai

மேலும் சிம்பு கௌதம் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஏ ஆர் ரகுமான் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாட்ரிக் கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

அதைவிட சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் யார் ஹீரோயினாக நடிப்பார் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. நதிகளில் நீராடும் சூரியனே படத்திற்கு முதன் முதலில் நயன்தாராவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்ய முயன்றதாக செய்திகள் வந்தது.

ஆனால் நயன்தாரா சிம்புவுடன் இனி நடிக்க மாட்டேன் என கூறி விட்டதால் தற்போது வேறு நாயகியை தேடி வருகிறார்களாம். பெரும்பாலும் கவுதம் மேனன் மலையாளத்தில் இருந்து ஏதாவது புதிய நடிகையை அறிமுகப்படுத்தவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News