திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அள்ளிக் கொடுத்த மணிரத்தினத்தை கிள்ளி பார்க்க சொன்ன ப்ரொடியூசர் கவுன்சில்.. பெப்சிக்கு வந்த கடும் நெருக்கடி

Simbu and Producer Council come under pressure to Mani Ratnam in Thuglife: தமிழ் சினிமாவில்  தனக்கென ஒரு கொள்கை முறையை வகுத்து அதிலிருந்து மாறுபடாமல் தீவிரமான ஒழுக்கத்தை கடைபிடித்து வருபவர் தான் முன்னணி இயக்குனர் மணிரத்தினம் அவர்கள்.

தன் கதையிலும் சரி, தனது கொள்கையிலும் சரி, யாருக்காகவும் சமரசம் செய்யாது தான் மேற்கொண்ட பணியை திறம்பட செய்து முடிக்கும் மணிரத்தினத்திற்கு தற்போது தக் லைஃப் மூலமாக பலவகையிலும் பிரச்சனைகள் கூட்டணி போட்டு வந்துள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதனை எப்போது திரையில் காணலாம் என்று ஆவலுடன் இருக்க, படப்பிடிப்பு நடக்குமா? நடக்காதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலால் கமலின் கால்ஷீட் பிரச்சனை சிக்கலாகவே சென்று கொண்டிருக்க அவரால் இளம் நடிகர்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

கால்ஷீட் பிரச்சனையால் துல்கர் சல்மான், ஜெயம் ரவி என ஒருவர் பின் ஒருவராக விலக துல்கருக்கு பதில் சிம்பு களம் இறக்கப்பட்டார். 

செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் ஒரே டேக்கில் நடித்து முடிக்கும் சிம்புவின் நடிப்பு பிடித்துப் போக, அவரை தக் லைஃப்பிலும் இணைய சம்மதித்தார் மணிரத்தினம்.

தக் லைஃப் படப்பிடிப்பை நடத்த விடாமல் தடுக்கும் தயாரிப்பாளர்கள்

சிம்பு ஏற்கனவே பண பிரச்சனையால் பல தயாரிப்பாளர்களிடம் முட்டி மோத, அதன் பாதிப்பு இன்று தக் லைஃப்பில் எதிரொளித்து வருகிறது. 

அன்பானவன்  அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இவர்கள் இருவரும் சிம்புவிற்கு எதிராக மணிரத்தினத்திடம் போர்க்கொடி பிடித்துள்ளனர்.

தங்களது பண பிரச்சனையை சரி செய்யாமல் சிம்புவை தக் லைஃபில் நடிக்க விட மாட்டோம் என்று கங்கணம் கட்டி பல அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்து வருகின்றனர் 

அதாவது பெப்சி தொழிலாளர்களிடம் சிம்பு நடிக்கும் திரைப்படத்தில் வேலை செய்யக்கூடாது என்பது போல் கண்டிஷன் போட்டு உள்ளார்களாம்.

கொரோனா காலகட்டத்தில் பெப்சி தொழிலாளர்களுக்கு தாமாகவே முன்வந்து பல நலத்திட்ட உதவிகளையும் பணம்  மற்றும் உணவுப் பொருள் போன்றவைகளை கொடுத்து கடவுள் போல் உதவியவர் மணிரத்தினம்.

இன்று அவர் படத்தை தடுக்க சொல்லி பெப்சி தொழிலாளர்களை பகடை காயாக உருட்டுகின்றனர் தயாரிப்பாளர்கள். செஞ்சோற்று கடன் தீர்க்க செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் பெப்சி தொழிலாளர்கள்.

Trending News