திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்புவுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே சூர்யா.. பல வருஷத்துக்கு முன்னாடி பண்ண வேண்டிய படம் இப்ப பண்ண போறாங்க.!

Actor Simbu – SJ Suryah: இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்ட எஸ் ஜே சூர்யா கிட்டதட்ட 8 வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் படங்களை இயக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியாகி சில நாட்களிலேயே எஸ் ஜே சூர்யா பல வருடங்களுக்கு முன்பு எடுக்க ஆசைப்பட்டு கைவிடப்பட்ட படம் ஒன்று மீண்டும் தூசி தட்டப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இதற்கு முன்பாகவே இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக இருந்து இருக்கிறது. வல்லவன் திரைப்படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணியில் ஒரு படம் எடுப்பதாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

Also Read:தமிழ் சினிமாவில் சைக்கோத்தனமான காதலை சொன்ன 5 படங்கள்.. பொம்மைக்காகவே உயிரை விட்ட எஸ்.ஜே.சூர்யா

அருணாச்சலம் vs சித்ரா (AC) என பெயரிடப்பட்ட இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டர் மற்றும் மாடு மேய்ப்பவர் என டூயல் ரோலில் நடிக்க இருந்து இருக்கிறார். வல்லவன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருந்த காரணத்தினால், சிம்புவால் இந்த படத்தின் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அதனால் எஸ் ஜே சூர்யாவும் இந்த படத்தை அப்படியே கைவிட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு, சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் இணைந்த போது இந்த படத்தை பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு எஸ் ஜே ஒரு முக்கிய காரணம் என்பதால் சிம்புவுக்கு அவருடன் இணைய வேண்டும் என்ற ஆசையும் எழுந்து இருக்கிறது.

Also Read:நின்னுபோன படத்தை தூசி தட்டும் எஸ் ஜே சூர்யா.. ரஜினி நண்பருக்கு மீண்டும் விடுத்த அழைப்பு

எஸ் ஜே சூர்யா தான் நடிக்க வேண்டிய படங்கள் எல்லாத்தையும் முடித்து விட்டு படம் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு கில்லர் என பெயரிடப்பட்டு இருக்கிறது. சிம்புவும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படங்களின் வேலைகள் முடிந்த பிறகு, சிம்பு-எஸ் ஜே சூர்யா கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது.

சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா இருவருமே குணத்தில் கொஞ்சம் ஏடா கூடமானவர்கள் தான். அப்படி இருக்கும் போது யார் எப்போது கோபப்படுவார்கள் என்று சரியாக கணிக்க முடியாது. ஏற்கனவே சிம்புவுக்கு கொரோனா குமார் பட பஞ்சாயத்து வேறு போய் கொண்டிருக்கிறது. இப்போது இவர்கள் இருவரும் இணையும் போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை.

Also Read:SJ சூர்யா போர் அடித்ததால் கருநாகத்துடன் இணையும் பிரியா பவானி.. சுட சுட வெளியான அப்டேட்

 

Trending News