ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ஒரு வழியா சிம்பு சொல்ல போகும் குட் நியூஸ்.. பிப்ரவரி 3 பிறந்த நாளுக்கு தயாரான வான வேடிக்கை

சிம்பு தக்லைப் படத்தில் தன்னுடைய போர்சன்களை எல்லாம் முடித்துவிட்டு ஒரு மாத காலமாக தாய்லாந்தில் தான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அவருடைய பிறந்தநாள் வருகிறது.

அடுத்த படத்தை பற்றி முக்கியமான அறிவிப்பு ஒன்றை அந்நாளில் வெளியிட இருக்கிறார். எஸ் டி ஆர 48, தேசிங்கு பெரியசாமி படம் , மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 2018 பட இயக்குனருடன் ஒரு படம் என்றெல்லாம் சிம்பு லைன் அப் நீண்டு கொண்டே போனது.

இப்பொழுது சிம்பு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த அறிவிப்பு தான் பிப்ரவரி 3ஆம் தேதி பிறந்த நாள் சர்ப்ரைஸாக வெளிவருகிறது, இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தக்லைப் படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கப் போகும் படம் இதுதான். அஸ்வந்த் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி இவர்கள் படம் எல்லாம் இதற்கு அப்புறம் தான். அடுத்த வார இறுதியில் தாய்லாந்தில் இருந்து சென்னை திருப்புகிறார் சிம்பு.

ஏற்கனவே மணிரத்னத்திற்கு இரண்டு நாட்கள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார் சிம்பு தக்லைப் படத்தில் சிம்புவின் வேலைகள் அனைத்தும் முழுவதுமாக முடிந்துவிட்டது. இருந்தாலும் ஏதாவது பட்டி டிங்கரிங் வேலைகள் இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு.

Trending News