புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய் படத்தின் பிரமோஷனுக்கு சென்ற சிம்பு.. உச்சகட்ட கோபத்தில் தயாரிப்பாளர்

ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் பத்து தல. இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் மாதம் கடைசி தேதியில் திரையரங்கில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

அதில் முதல் பிரமோஷன் ஏஆர் ரகுமான் பாடலுடன் வெளி வருகிறது. அதற்காக ஏஆர் ரகுமான், அவரது மகன், படத்தின் இயக்குனர், ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் போன்றவர்கள் நடித்து வருகிறார்கள். அதற்காக பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பிரமோஷனை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள்.

Also read: மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறுது.. மொத்த படக் குழுவையும் பரிதவிக்க விட்ட சிம்பு

சிம்புவை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் பிரமோஷனுக்கு படக்குழுவினர் சிம்புவை கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் சிம்பு வர மறுத்து விட்டாராம் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர் படத்தின் பிரமோஷனுக்கு அவரைப் போகவில்லை என்றால் அது எப்படி சாத்தியமாகும். இதனால் தயாரிப்பாளர் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்.

ஆனால் சிம்பு, விஜய் படத்திற்கு சம்பளம் வாங்காமல் பிரமோஷனுக்கு போயிருக்கிறார். இவர் ஏற்கனவே பட சூட்டிங்க்கு சரியான நேரத்தில் போக மாட்டார் என்று பல சர்ச்சைகளில் இவர் பெயர் அதிகமாகவே அடிபட்டது. இப்படி இருக்கையில் இவர் படத்தின் பிரமோஷனை கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயமா என்று பிரபலங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

Also read: சிம்பு கேரியருக்கு முட்டுக்கட்டை போடும் அம்மா.. செக் உடன் வந்த தயாரிப்பாளர் வெறுத்துப் போன சம்பவம்

அதிலும் சிம்பு முக்கியமாக சில கட்டளைகளை போட்டிருக்கிறார். அதாவது இந்த பிரமோஷனுக்கு அனைவரும் கருப்பு சட்டை அணிந்து தான் நடிக்க வேண்டும் என்பதுதான் அவர் கூறியது. அவர் சொன்ன மாதிரியே நடந்து வருகிறது. இவர் சொன்னபடியே எல்லா விஷயங்களையும் செய்து வரும் போது இவர் மட்டும் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை.

இதனை தொடர்ந்து சிம்பு இல்லாமல் இந்த பிரமோஷன் எப்படி வெற்றி பெறும் என்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அப்படி சிம்பு என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்த்து வரும் பட குழு. மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே எங்களுக்கு டார்கெட்.. விஷால் , சிம்பு செய்யும் ராஜதந்திரம்

Trending News