வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூலை அள்ளியது.
இப்படம் சிம்புவின் சினிமா வாழ்வில் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்புவின் நடிப்பில் வெளியான இப்படம் அவருக்கு ஒரு கம்பேக் ஆகவும் இருந்தது. மாநாடு படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில் இப்படம் 100 கோடி வரை லாபம் பார்த்துள்ளது. இதற்காக படக்குழுவினர் சக்சஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் சிம்பு மட்டும் பங்கேற்கவில்லை. சிம்பு வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு வேறு காரணங்கள் உள்ளது.
அதாவது சிம்பு மாநாடு திரைப்படம் 108 கோடி வசூலித்ததாக போஸ்டர் வெளியிட விரும்பியுள்ளார். அதை படத்தின் சக்சஸ் மீட்டில் முக்கியமாக வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கு தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
இதனால் நடந்த வாக்குவாதத்தில் தான் சிம்பு சக்சஸ் மீட்டுக்கு வர மறுத்துள்ளார். மேலும் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளில் பங்கு கேட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு எதிராக சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த பிரச்சினையின் காரணமாக இரு தரப்பினருக்கும் சிறிய உரசல் இருந்துள்ளது. இவையெல்லாம் சேர்த்து தான் சிம்பு சக்சஸ் மீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். எது எப்படி இருந்தாலும் சிம்புவிற்கு இவ்வளவு பெரிய புகழை தேடித்தந்த மாநாடு படத்தின் இந்த நிகழ்வை அவர் தவிர்த்திருப்பது திரையுலகில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.