புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சாமி வரம் கொடுத்தாலும் கேட்டை மூடும் பூசாரி.. தொடர்ந்து சிம்பு போடும் முட்டுக்கட்டை

எஸ் டி ஆர் 48 என்ன ஆனது என்று தெரியவில்லை. சிம்பு தனது 49 வது படமான தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அஸ்வந்த் மாரிமுத்து உடன் தனது 50 ஆவது படத்தில் இணைய போவதாக ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கிறது.

கொஞ்ச நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வருகிறார் சிம்பு. தேசிங்கு பெரியசாமி மற்றும் ராஜ்கமல் ப்ராஜெக்ட் ட்ராப் ஆனதிலிருந்து பெரிய லெவெலில் அவர் சோபிக்கவில்லை . மலையாள சூப்பர் ஹிட் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது ஆனால் அதுவும் கைகூடி வரவில்லை.

கடைசியாக அஸ்வந்த் மாரிமுத்து ப்ராஜெக்ட்டை தான் இப்பொழுது மழை போல் நம்பி இருக்கிறார். ஆனால் சிம்புவை தேடி தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் பெரிய இடத்தில் இருந்து வந்த அழைப்பை கூட நிராகரித்துவிட்டாராம் சிம்பு.

கௌதம் வாசுதேவ் மேனன் இப்பொழுது வெற்றிமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஏதாவது கதைகள் இருந்தால் கொடுக்கும்படி கேட்டும் வருகிறாராம். அப்படி வெற்றிமாறன் கொடுத்த ஒரு கதையை கௌதம் மேனன் இப்பொழுது இயக்கப் போகிறார்.

அதற்காக சிம்பு மற்றும் தனுஷ் இருவரையும் நாடியுள்ளார் ஏற்கனவே சிம்பு அவருடன் மனஸ்தாபத்தில் இருந்து வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இருவருக்கும் பஞ்சாயத்து இருக்கிறது. அதேபோல் வெந்து தணிந்தது காடு படத்தால் சிம்புவுடனும் சலசலப்பு இருக்கிறது.

இரண்டு ஹீரோக்களும் மறுத்த நிலையில் கையில் கதையை வைத்துக்கொண்டு முழித்து வருகிறார் கௌதம். தக் லைப் படத்திற்கு பிறகு எந்த படமும் கையில் இல்லாத சிம்பு கௌதம் மேனன் உடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்

- Advertisement -

Trending News